இந்தியா பாகிஸ்தான் போட்டி செப். 2 நடப்பதில் சிக்கல்.. ஆசிய கோப்பை ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம்

1983 ஆம் ஆண்டிலிருந்து ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஆசிய அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியாகும். இந்த ஆசிய கோப்பையின் 16-வது ஆண்டிற்கான கிரிக்கெட் போட்டிகள் தற்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து நடைபெற்று வருகிறது .

- Advertisement -

இந்த வருடத்திற்கான ஆசிய கோப்பை போட்டிகளில் பங்கேற்கும் ஆறு அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்தியா பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகியவை ஒரு பிரிவிலும் ஸ்ரீலங்கா ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மற்றொரு பிரிவிலும் இடம் பெற்று இருக்கின்றன. இந்தத் தொடரின் துவக்க போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளிகள் இன்று விளையாடி வருகிறது. இதனைத் தொடர்ந்து நாளை நடைபெற இருக்கும் போட்டியில் ஸ்ரீலங்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோத உள்ளன.

- Advertisement -

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி இலங்கையில் உள்ள கண்டி நகரில் வைத்து நடைபெற இருக்கிறது இந்தப் போட்டிக்கான தேதி மற்றும் இடம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. மேலும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் அறிவிப்பு வெளியான உடனேயே வெற்றி தீர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்தப் போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி இன்று காலை கொழும்பு புறப்பட்டு சென்றது. கேஎல் ராகுல் சிறிய காயம் காரணமாக இந்திய அணியுடன் புறப்படவில்லை. இது தொடர்பாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கே எல் ராகுல் இந்தியா பங்கேற்கும் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிவித்திருந்தார். அவர் இந்த ஆசிய கோப்பையில் பங்கேற்பது தொடர்பான முடிவு செப்டம்பர் நான்காம் தேதி எடுக்கப்படும் என தெரிகிறது

இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. போட்டி நடைபெறும் நாளான சனிக்கிழமை இடியுடன் கூடிய மழை இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கண்டி நகரின் கூகுள் வானிலை அறிக்கை தெரிவித்து இருப்பதாக ஏஎன்ஐ பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருக்கிறது. மேலும் அன்றைய தினம் 90 சதவீதம் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் இணையதள வானிலை அறிக்கை தெரிவித்து இருப்பதாக அந்தப் பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது

- Advertisement -

இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என ரசிகர்களிடம் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உலகக்கோப்பைக்கு முன்னோட்டமாக ரசிகர்கள் இந்த போட்டியை பார்க்க இருந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் வானிலை அறிக்கை பற்றிய செய்தி ரசிகர்களை சற்று ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. இருப்பினும் மழை பெய்யாமல் போட்டி நடைபெற ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்தப் போட்டி ஒருவேளை மழையால் தடை பட்டாலும் சூப்பர் 4 சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதும் என்பது ரசிகர்களுக்கு ஆறுதலான மற்றொரு விஷயம்.

பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த ஆசியக்கோப்பை அரசியல் காரணங்களால் இந்தியா அங்கு சென்று விளையாட மறுப்பு தெரிவித்தது. இதன் காரணமாக இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஹைபிரிட் முறையில் போட்டியை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும் மீதம் இருக்கும் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி இலங்கையிலும் நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி மிகச் சிறப்பாக விளையாடி நேபால் அணிக்கு எதிராக 342 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஆடிவரும் நேபாளனி தற்போது வரை 23ஓவர்களில் 104 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles