“இந்தியாவுக்கு பிரஷர் அதிகம்” – உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் இரண்டு அணிகளை கணித்த ஜாக் கல்லிஸ்.!

இந்தியாவில் நடைபெற்று வரும் 13 வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது வரை 32 ஆட்டங்கள் முடிவடைந்து இருக்கிறது. இன்னும் 13 லீக் ஆட்டங்கள் மீதம் இருக்கின்றன. இந்நிலையில் உலக கோப்பையின் இறுதி போட்டியில் ஆடும் அணிகள் எவை என்பது குறித்த கருத்து கணிப்புகளும் சூடு பிடித்துள்ளது.

- Advertisement -

இந்த 32 ஆட்டங்களின் முடிவில் 12 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்திலும் இந்தியா 12 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் நியூசிலாந்து அணி நான்காவது இடத்திலும் இருக்கின்றன . சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில் ஆஸ்திரேலியா அணியின் சுழற் பந்துவீச்சாளர் நாதன் லியோன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும் என தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

- Advertisement -

இந்த உலகக் கோப்பையின் தொடக்கத்திலிருந்து இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி விளையாடி வருகிறது. 2023 ஆம் ஆண்டின் உலக கோப்பையில் ஆறு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியிலும் தோற்காத ஒரே அணி இந்தியா மட்டும் தான். இந்தியாவிற்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா நியூசிலாந்து இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் போன்ற அணிகளை வென்றாலும் நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

- Advertisement -

இன்னொருபுரம் ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு போட்டிகளில் சவுத் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தாலும் அடுத்த நான்கு போட்டிகளிலும் அதிரடியாக வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்த இரண்டு அணிகளை தவிர மற்ற அணிகள் உலகக்கோப்பை தொடரில் பெரிதும் ஆதிக்கம் செலுத்தி விளையாடவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் தோல்வியடைந்து ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில் சவுத் ஆப்பிரிக்கா அணியின் முன்னால் ஆல் ரவுண்டரான ஜாக் காலிஸ் உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி விளையாடும் இரண்டு அணிகளை பற்றி தனது கருத்துக்கணிப்பை பதிவு செய்து இருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் இந்தியா அணி தான் இந்த வருட உலகக்கோப்பையில் நம்பர் ஒன் டீம் என தெரிவித்துள்ளார். அவர்கள் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும் சொந்த நாட்டில் நடப்பது சிறிது அழுத்தத்தையும் கொடுக்கும் எனவும் பதிவு செய்து இருக்கிறார்.

- Advertisement -

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் என்று நான் நினைக்கிறேன். இந்திய அணி தான் கோப்பையை வெல்வதற்கான அதிக வாய்ப்புகள் இருந்தாலும் உலகக் கோப்பை போட்டிகள் அவர்கள் நாட்டில் நடப்பதால் அவர்களுக்கு சிறிது அழுத்தம் இருக்கும். இறுதிப்போட்டி வரும்போது இந்தியா அழுத்தத்தை உணர்வது தென்னாப்பிரிக்காவிற்கு சாதகமாக அமையலாம்” என தெரிவித்து இருக்கிறார்.

மேலும் இது குறித்து தொடர்ந்து பேசுகையில்”‌ இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும். முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் அவர்கள் அதிரடியாக மீண்டு வந்திருப்பது மிகவும் அச்சுறுத்தலான ஒன்று என்று தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் நவம்பர் 12ஆம் தேதி கொல்கத்தாவில் வைத்து விளையாட இருக்கின்றன.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles