இந்தாங்க பிளாங்க் செக்.. கொல்கத்தா அணிக்கு இனி நீங்கதான்.. கம்பீரை விடாத ஷாருக்கான்.. பறிபோகும் இந்திய பயிற்சியாளர் வாய்ப்பு

இந்தியாவில் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த உலகக்கோப்பையோடு பயிற்சியாளர் ராகுல் டிராட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது.

- Advertisement -

இதற்கிடையில் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட பல முன்னாள் வீரர்களுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே ஜஸ்டின் லாங்கர், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட ஆஸ்திரேலியா வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு அவர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகின.

- Advertisement -

மேலும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ஸ்டீபன் பிளமிங்கிடமும் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
அவரும் சில காரணங்களால் இதை நிராகரிக்க அதற்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வாரியமும் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கேட்டுக் கொண்டது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணையின் ஆலோசகராகவும் திகழ்ந்துவரும் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக செயல்பட விரும்புவதாக கிரிக்கெட்டின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. இதை அடுத்து இந்திய அணிக்கு கம்பீர் பொருத்தமாக இருப்பார் என்று பலரும் கூறிவரும் நிலையில் 27ஆம் தேதியோடு பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. கம்பீர் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பிறகு பிசிசிஐ அதிகாரிகள் கம்பீர உடன் பேச்சு வார்த்தை நடத்தலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாரூக் கான் கௌதம் கம்பீரிடம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு கொல்கத்தா அணியை நிர்வகிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம். இதற்காக எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என பிளாங்க் செக்கை ஒன்றை கொடுத்துள்ளாராம். எனவே கொல்கத்தா அணியின் உரிமையாளரிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின்னரே கம்பீர் இது குறித்து முடிவெடுப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க:பைனல் நினைத்து எல்லாம் கவலை இல்லை.. எங்க கூட கம்பீர் பாய் இருக்காரு.. கேகேஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

கௌதம் கம்பீர் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த போது இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தத் தொடரில் வழிகாட்டியாக இருந்து இறுதிப்போட்டி வரை அழைத்து வந்திருக்கிறார். இதனால் ஷாருக்கானின் அபிமானியான கௌதம் கம்பீரை ஷாருக்கான் அவ்வளவு எளிதில் விடமாட்டார் என்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த நிலையில் இதற்கான இறுதி முடிவு குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் தெரியவரும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles