என்ன அஸ்வின் இப்படி பண்ணிட்டீங்க.. இவ்ளோ கிட்ட வந்துட்டு.. என்னோட இந்த சாதனையை முறியடிக்காம ரிட்டயர் ஆகிட்டீங்களே – அனில் கும்ப்ளே பேட்டி

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளும் 1-1 சமநிலையை எட்டி உள்ளது. மூன்றாவது டெஸ்ட் தொடரானது நடைபெற்று வரும் நிலையில், உலகப் புகழ்பெற்ற ஆஃப் ஸ்பின்னரும், இந்தியாவின் தலைசிறந்த ஆல்ரவுண்டருமான ரவிச்சந்திரன் அஸ்வின் டிசம்பர் 18, புதன்கிழமை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

- Advertisement -

அஸ்வினின் இந்த முடிவை குறித்து ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் சமூக வலைத்தளங்களில் தங்களது வருத்தங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த வரிசையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேயும், அஸ்வினுக்கு தனது வாழ்த்துக்களையும் இந்த முடிவை குறித்து சில வருத்தங்களையும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்திய அணி உங்களின் பிரிவால் வாடும், கும்ப்ளே:

அனில் கும்ப்ளே ESPNcricinfo ஆல் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில் கூறியதாவது, “அஷ், அருமையான உங்கள் கிரிக்கெட் வாழ்க்கைக்கு எனது வாழ்த்துகள். நீங்கள் இந்தியாவுக்கான ஒரு சிறந்த பவுலரும், ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராகவும் இருந்துள்ளீர்கள். நீங்கள் நிச்சயமாகவே இந்தியா அணியால் தவறவிடப்படுவீர்கள்.

தினம் தினம் நான் இந்த போட்டியில் விளையாடுவேனா? என்ற எதிர்பார்ப்பை சுமந்து கொண்டு இருப்பது அவ்வளவு எளிதல்ல. உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை சரியாக அமைத்துள்ளீர்கள். இந்திய அணிக்கு தற்போதைய வெற்றியாளர் நீங்கள்தான், இந்திய அணி நிச்சயமாகவே உங்களின் பிரிவால் வாடும்”.

- Advertisement -

நீங்கள் அந்த சாதனை செய்வீர்கள் என்று நினைத்தேன்:

சர்வதேச அரங்கில் இன்று உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டதில் நான் சற்று ஏமாற்றமடைந்தேன். நீங்கள் 619-க்கு அப்பால் செல்வதை நான் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அது நடைபெறவில்லை. இந்த ஓய்வுக்கான காரணங்கள் உங்களிடம் உள்ளன என்று நான் நம்புகிறேன்” என்று கும்ப்ளே மேலும் கூறினார்.

இதையும் படியுங்கள்: இப்படி நடுவில விட்டுட்டு போவார்னு.. கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல.. அந்த வீரர் தான் அஸ்வின் ஓய்வு எல்லாத்துக்கும் காரணம் – ஹர்பஜன் சிங் பேட்டி

விரைவில் சந்திப்போம் நண்பா:

“உங்கள் இரண்டாவது அத்தியாயத்திற்காக எனது வாழ்த்துக்கள். மேலும் இது முதல் அத்தியாயத்தைப் போலவே புகழ்பெற்றதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதனால், அஷ், இந்தியாவிற்கு நீ செய்த அற்புதமான சாதனையுடன், ஒரு சிறந்த கிரிக்கெட் வாழ்க்கையே வாழ்ந்ததற்காகவும் எனது வாழ்த்துக்கள். இனிவரும் காலங்களில் அதேபோலவே அனைத்தையும் சிறப்பாக செய்ய. விரைவில் சந்திப்போம்,” என கும்பிள் முடித்தார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles