என் மகன்னு தெரிஞ்சுதான் விமர்சனம் வந்துச்சு.. அப்போ அவன்கிட்ட இந்த ஒரு அட்வைஸ் மட்டும்தான் குடுத்தேன் – சேவாக் பேட்டி

அண்டர்-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக சிறப்பாகச் செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் முன்னாள் இந்திய அதிரடி வீரர் வீரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக். குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் தனது பேட்டிங் மூலம் முக்கியப் பங்களிப்பை வழங்கி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம் தனது தேர்வு குறித்து எழுந்த விமர்சனங்களுக்கும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

இந்தச் சூழ்நிலையில், தனது மகன் ஆர்யவீர் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் சில முக்கிய விஷயங்களைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து சேவாக் கூறும்போது, அண்டர்-19 ஆசிய கோப்பையை இந்திய அணி வென்றதில் ஆர்யவீரின் பங்களிப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும், குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் அவர் சிறப்பாக விளையாடியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மரியாதை பெற வேண்டுமென்றால் பெரிய ஸ்கோர்களை அடிக்க வேண்டும் என்று தொடர்ந்து மகனிடம் அறிவுரை கூறியதாகவும், அதையே இந்தத் தொடரில் ஆர்யவீர் செய்து காட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது குடும்பப் பெயரால் விமர்சனங்களைச் சந்தித்த ஆர்யவீர், இனி தனது திறமையால் மக்களின் அன்பைப் பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles