உலகப் புகழ்பெற்ற ஆஃப் ஸ்பின்னரும், இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டருமான ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அஸ்வினின் இந்த முடிவானது ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அவருடைய முடிவு எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவர் தொடர்ந்து விளையாடவில்லை என்பது மட்டுமல்லாமல், வாஷிங்டன் சுந்தருக்கு கிடைத்த வாய்ப்புகள் அவருக்கு வழங்கப்படவில்லை, அதனால்தான் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
அவருடைய சாதனைக்கு மரியாதை செலுத்த வேண்டும்:
ஹர்பஜன், ஸ்போர்ட்ஸ் நவ்விடம் கூறியதாவது “எனக்கு அஸ்வினின் முடிவை குறித்து ஆச்சரியமாக இருந்தது. ஒரு தொடரின் நடுவே இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதை நினைத்து நான் சிறிது அதிர்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். ஆனால் அவர் எடுத்திருக்க முடிவுகளை நாம் மதிக்க வேண்டும். அவர் நிறைய சிந்தனையை உடைய கிரிக்கெட் வீரர். அவருக்கும் அவருடைய சாதனைக்கும் நாம் மரியாதையை செலுத்த வேண்டும். இந்திய அணிக்காக பல போட்டிகளையும் பல தொடர்களையும் வென்று தந்துள்ளார். அவர் ஒரு சிறந்த ஆட்டக்காரர் அவரது கிரிக்கெட் துறையை விட அவரது எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இது உங்களுக்காக எனது பிரார்த்தனை”.
நாம் என்ன நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் வந்துவிட்டது:
மேலும் அவர், “நீங்கள் உங்கள் அணிக்காக விளையாடாமல் வெளியில் இருக்கும் பொழுதும் மற்றும் இரண்டு மூன்று தொடர்களில் மட்டும் விளையாடும் பொழுதும், சிலவேளையில் வீரர்கள் ’நாம் இனி என்ன நிரூபிக்க வேண்டும், நாம் தொடர்ந்து வெளியே இருக்கிறோமே, இனி விளையாடுவேனா?’ என்ற எண்ணத்தை மனதில் கொள்கிறார்கள்”.
அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை:
“நான் கேள்விப்பட்டேன் இந்திய அணி வாஷிங்டன் சுந்தருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது என்று. ஏனென்றால் இங்கிலாந்தில் 5 தொடர்கள் நடைபெறப் போகின்றது. இதில், இரண்டு ஸ்பின்னர்கள் மட்டுமே அங்கு செல்ல முடியும். ஒன்று ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆக இருக்கவே முடியும் அல்லது வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜாவாக இருக்க முடியும். இந்த வீரர்களைப் பற்றிய நிறைய விஷயங்கள் அவர்கள் மனதில் இருக்கலாம். நமக்கு அது பற்றி தெரியாது. ஆனால் நான் ஒன்று சொல்லுவேன்……. இந்த முடிவானது மிக எளிதான முடிவல்ல” என்று அவர் கூறி முடித்தார்.
இதையும் படியுங்கள்: நம்பவே முடியல.. இது என்ன பழக்கம்.. இதையெல்லாம் எப்படி உங்களால கொண்டாட முடியுது.. நாங்க இப்பவும் எங்க இருக்கோம்னு தெரியுமா – நாதன் லியோன் பேட்டி
ஆர் அஸ்வின் அனைத்து வடிவங்களிலும் 765 விக்கெட்டுகளை வீழ்த்திருக்கிறார், இந்தியாவின் இரண்டாவது வெற்றிகரமான பந்துவீச்சாளராக இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் இரண்டாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆனார், அனில் கும்ப்ளேவின் 619 விக்கெட்டுகளின் சாதனையை மட்டுமே பின்தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.

