நம்பவே முடியல.. இது என்ன பழக்கம்.. இதையெல்லாம் எப்படி உங்களால கொண்டாட முடியுது.. நாங்க இப்பவும் எங்க இருக்கோம்னு தெரியுமா – நாதன் லியோன் பேட்டி

ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் பிரிஸ்பேன் கபா மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

அதன் பிறகு களம் கண்ட இந்திய இந்திய அணியில் அடுத்தடுத்த விக்கெட் இழந்ததால் 213/9 என்ற நிலையில் தடுமாறியது, ஆனால் கடைசி கட்டத்தில் ஜோடி சேர்ந்த ஆகாஷ் தீப் மற்றும் பும்ராவும் இந்திய அணி ஃபாலோ-ஆனை தவிர்ப்பதற்கு காரணமாக இருந்தனர். ஃபாலோ-ஆன் தவிர்க்கப்பட்டதும் ஆடை அறையில் இருந்த இந்திய வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

- Advertisement -

இதனைப் பார்த்து விரக்தி அடைந்த ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியான், இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் பேட்டிங் செய்ய விரும்பாததால் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது போல் தோன்றியது எனக்கு குற்றம் சாடி உள்ளார்.

- Advertisement -

லியான், இவர்கள் இப்படி பண்ணுவார்கள் என்று நினைக்கவே இல்லை:

லியான், 5வது நாளின் போது இந்திய அணியினரின் ஆடை அறையில் நடந்த கொண்டாட்டங்களைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அதற்கு கூறிய பதிலாவது, “ஆம் எங்களில் சிலர் அவர்களின் கொண்டாட்டங்களை பார்த்து ஆச்சரியப்பட்டு அதைப் பற்றி பேசிக்கொண்டோம். நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற விரும்பும் இடத்தில் பாதுகாப்பாக உள்ளோம்.

குறிப்பிட்டு சொல்லப் போனால் இன்னும் 185 ரன்கள் முன்னிலை வகிக்கிறோம். நான் இனி என்ன நினைக்கிறேன் என்றால் நாங்கள் இன்னும் பேட்டிங்கில் சிறப்பாக ஈடுபட்டால் எங்கள் அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்து செல்லலாம்”.

- Advertisement -

எங்கள் அணியே பார்த்து பயந்து விட்டார்கள் போல:

மேலும் அவர், “நாங்கள் ஃபாலோ-ஆனை அமல்படுத்தினால், அவர்களின் டாப் ஆர்டர் பேட்டிங் செய்ய வேண்டும், இதில் அவர்களுக்கு விருப்பமில்லை, அதனால் தான் கொண்டாடுகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. ஜோஸ் இல்லாத பட்சத்தில் ஃபாலோ-ஆனை அமல்படுத்துவது கொஞ்சம் சவாலாக உள்ளது. மிட்ச் (மிட்செல் ஸ்டார்க்) மற்றும் பாட் , அவர்கள் ஆஸ்திரேலியாவுக்காக சிறப்பாக செயல்பட்டனர்.

பல வருடங்களாக ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சு தாக்குதலில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். ஆஸ்திரேலியா அணியின் வேலை நெறி மற்றும் அவர்களின் ஃபீல்டின் ஆகியவற்றில் நான் பெருமை கொள்கிறேன். அது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர்களின் செயல் திறன்களை பார்த்து அதனை செயல்படுத்த முயற்சி செய்கிறேன்” என்றார், நாதன் லியான்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles