சூர்யா இஷான் கிஷான் ருத்ர தாண்டவம்.. வெறும் 15.2 ஓவர்.. 208 ரன்.. நியூசி பவுலர்கள் தவிடு பொடி.. இந்தியா வரலாற்று வெற்றி

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது t20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஐந்து ஓவர்கள் வீதம் வைத்து 208 ரன்கள் இலக்கை சேஸ் செய்து வரலாற்று வெற்றி பெற்றது. ராய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதில் அதிகபட்சமாக கேப்டன் சான்ட்னர் இறுதியில் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கிய நிலையில் விரைவாகவே சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் ஆட்டம் இழந்தனர். அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 48 பந்துகளில் 122 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதில் இஷான் இஷான் 76 ரன்னில் ஆட்டம் இழக்க, கேப்டன் சூர்யா 82 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் இந்திய அணி 15. 2 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. இதன் மூலமாக இந்திய அணி குறைந்த ஓவர்களில் அதிகபட்ச ரன்கள் இழப்பை சேஸ் செய்து வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles