ஐபிஎல் பைனல் மைதானம் வெளியீடு.. பயந்தது நடந்திடுமோ.. சிஎஸ்கே தோனி ரசிகர்கள் பதட்டம்

17 வது ஐபிஎல் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. இப்போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது சென்னை அணி. ஐபிஎல்லின் முதல் போட்டியை சென்னையில் கண்டுகளித்த ரசிகர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இந்தியாவில் நடைபெறும் லோக்சபா தேர்தலின் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் போட்டிகளின் முதல் கால அட்டவணை மட்டுமே வெளியிட்டது. பின்னர் தேர்தல் வாரியத்திடம் கலந்து ஆலோசித்து விட்டு இரண்டாம் கால அட்டவணையை சீக்கிரம் வெளியிட உள்ளதாக அறிவித்தது.

- Advertisement -

பிறகு திடீரென்று பிசிசிஐ துபாய் சென்று மீதமுள்ள போட்டிகளை ஷார்ஜாவில் நடத்துவதற்கான சாத்திய கூறுகளை அங்குள்ள அதிகாரிகளிடம் விவாதித்தது. பிறகு 2019ஆம் ஆண்டு இந்தியாவில் தேர்தல் நடைபெற்ற போதிலும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றன. அதுபோல தேர்தல் நடக்கும் மாநிலங்களில் நடக்க இருக்கும் போட்டியை வேறு மாநிலங்களுக்கு மாத்தலாம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

- Advertisement -

சமீபத்தில் லோக்சபா தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்பிறகு அட்டவணையை சீர்திருத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் இறுதிப் போட்டியை சென்னையில் நடத்த முடிவு செய்துள்ளது. கடந்த சீசனில் இறுதிப்போட்டி குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நிலையில் இந்த முறை அங்கு நடக்க இருக்கும் தேர்தலின் காரணமாக தற்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதாவது ஒரு பிளே ஆப் சுற்று மற்றும் ஒரு எலிமினேட்டர் போட்டி குஜராத்திலும், மற்றொரு பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெறும். இதற்கான அட்டவணை விரைவில் வெளியாகும். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் இறுதிப் போட்டியை காண போகும் மகிழ்ச்சியில் இருந்தாலும் மறுபுறம் சோகத்திலும் உள்ளனர்.

- Advertisement -

காரணம் மகேந்திர சிங் தோனி தனது கடைசி போட்டி சென்னையில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறார். எனவே அவர் கூறியதைப் போன்று தற்போது சூழ்நிலையும் அவருக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. சென்னை அணி பிளே ஆப் அல்லது இறுதி போட்டிக்கு முன்னேறினால் இரு போட்டிகளும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும். எனவே இந்த சீசன் தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் சென்னை அணி ரசிகர்கள் தற்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 2008ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக பதவியேற்ற தோனி 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையையும் வென்று கொடுத்து தற்போது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியும் உள்ளார். எனவே இதுவே அவருக்கு கடைசி சீசனாக இருக்கும் என்று உறுதியாக பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles