கொரோனா கால விதிமுறை இன்னும் தேவையா.? அது எங்க பவுலருக்கு பெரிய பிரச்சனையா இருக்கு.. ஐசிசிக்கு கோரிக்கை வைத்த இந்திய கேப்டன் கில்

டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டர்களை விட பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளத்தில் சற்று அதிகமான சாதகமான சூழல் கிடைக்க வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட்டில் இருந்து கிடைக்கும் உதவி மிகவும் முக்கியமானது என்றும் அவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இந்தச் சூழ்நிலையில், கொரோனா காலத்தில் கொண்டுவரப்பட்ட உமிழ்நீரைப் பயன்படுத்துவதற்கான தடையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்றும் சுப்மன் கில் வலியுறுத்தியுள்ளார். கொரோனா பெருந்தொற்று முடிந்து நீண்ட காலம் கடந்துவிட்ட நிலையிலும், பந்தை பளபளப்பாக்க உமிழ்நீரைப் பயன்படுத்துவதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படாதது ஏன் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து சுப்மன் கில் கூறும்போது, கொரோனா காலத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட விதிமுறையை தற்போதைய சூழலுக்கு ஏற்ப மீண்டும் பரிசீலிக்க வேண்டும். அந்தக் காலகட்டத்திற்கான கட்டுப்பாட்டை இப்போதும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கு உதவும் வகையில் இந்தத் தடையை நீக்குவது குறித்து கிரிக்கெட் நிர்வாகம் ஆலோசிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles