2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் உலக கிரிக்கெட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தைச் சேதப்படுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியது.
இந்த விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் உள்ளிட்ட வீரர்கள் தண்டனைகளையும் எதிர்கொண்டனர்.
ஆனால், இந்தச் சம்பவம் நடைபெற்ற போட்டிக்கு முன்பே ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் சில சந்தேகங்கள் எழுந்ததாக தற்போது பேசப்பட்டுள்ளது. குறிப்பாக, பந்து மிகவும் விரைவாக ரிவர்ஸ் ஸ்விங் ஆனது அப்போதே கவனத்தை ஈர்த்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் தனது பார்வையைப் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து ஏபி டிவில்லியர்ஸ் கூறும்போது, கிங்ஸ்மீட் மைதானத்தில் பந்து இவ்வளவு சீக்கிரமாக ரிவர்ஸ் ஸ்விங் ஆனது மிகவும் சந்தேகமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் செயல்பாடுகள் குறித்த சந்தேகம் தனக்கு அப்போதே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

