தோனியின் வழியை பின்பற்றும் கம்மின்ஸ்.. 35 வினாடியில் ஒரு டீம் மீட்டிங்கா.? உண்மையை உடைக்கும் சன்ரைசர்ஸ் கோச்

ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாக சரியான கேப்டன் மற்றும் வழிநடத்துதல் இல்லாமல் தவித்து வந்த சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த முறை பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணி சிறந்த பங்களிப்பை வழங்கி தற்போது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிபயர் போட்டியில் கேப்டன் பேட் கம்மின்ஸ் டீம் மீட்டிங்கை வெறும் 35 வினாடிகளுக்குள் முடித்தது தெரியவந்துள்ளது. இந்திய அணியின் கேப்டனாக இருந்த போதும் சரி, சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் கேப்டனாக இருந்த போதும் மகேந்திர சிங் டோனி அவரது டீம் மீட்டிங்கை பெரிய அளவில் நடத்த மாட்டார்.

- Advertisement -

களத்தை விட்டு வெளியேறிய பிறகு பந்துவீச்சாளர்களுடன் பெரிதாக ஆலோசனை கூட்டம் நடத்தியதில்லை. அவர் பெரும்பாலும் களத்திற்கு உள்ளே முடிவெடுப்பார். சூழ்நிலைகளை உள்வாங்கி அதற்கு தகுந்தவாறு தனது உள்ளுணர்வோடு முடிவெடுப்பதில் தோனி எப்போதுமே தனித்துவம் வாய்ந்தவர். ஆனால் இவருக்கு நேர் மாறாக ரோஹித் சர்மா களத்தில்தான் பெரும்பாலும் பந்து வீச்சாளர்களுடன் ஆலோசனைகளை வைத்துக் கொள்வார்.

தற்போது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் கம்மின்ஸ் டீம் மீட்டிங் ஸ்டைல் தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் சைமன் கூறுகையில்
“கம்மின்ஸ் ஒரு பிராக்டிகலான மனிதர். அமைதியாக தனது திட்டத்தினை செயல்படுத்துவார். அணி வீரர்களின் பிரச்சினைகளையும், என்ன ஓட்டத்தையும் எளிதாக புரிந்து கொள்வார். எதிரணி பற்றிய விவரங்களையும், தரவுகளையும் தெளிவாக அறிந்து கொள்வார்.

- Advertisement -

அதேபோல நேரத்தை அதிகமாக விரயம் செய்ய மாட்டார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 35 வினாடிகளில் தனது டீம் மீட்டிங்கை முடித்தார். அந்தப் போட்டியில் கேப்டனாக கம்மின்ஸ் பங்கு அதிகம். ஏனென்றால் இரண்டு வலது கை பேட்ஸ்மேன்கள் விளையாடும் போது ஒரு இடது கை பந்துவீச்சாளர் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.

இதையும் படிங்க:எழுதி வச்சுக்கோங்க.. சாம்பியன் கோப்பையை இந்த அணி தான் கைப்பற்றும்.. ஹைடன் கூறும் ரகசியம்

ஆனால் அவர் அபிஷேக் ஷர்மாவை பந்து வீச வைப்பார் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. அதுதான் ஆட்டத்தை எங்களிடம் மொத்தமாக கொண்டு வந்தது. பயிற்சியாளர் வெட்டோரி மற்றும் கேப்டன்க்கு இடையே நல்ல புரிதல் உள்ளது. அவர்கள் இருவரும் அணி வீரர்களுக்கு சுதந்திரம் கொடுத்து விளையாட வைப்பது எங்கள் அணியின் வெற்றிக்கான ரகசியம்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles