மழையால் ரத்தான ஆட்டம்.. ஆனால் சூர்யகுமார் யாதவ் அசரலையே.. 2 சிக்ஸ் அடித்து பிரம்மாண்ட வரலாறு

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி விளையாடியது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிய நிலையில், 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 97 ரன்களை சேர்த்திருந்தது. இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 24 பந்துகளில் 2 சிக்ச், 3 பவுண்டரி உட்பட 39 ரன்களுடனும், சுப்மன் கில் 20 பந்துகளில் ஒரு சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 37 ரன்களுடனும் இருந்தனர். 

- Advertisement -

மழையால் ஏமாற்றம்

அப்போது திடீரென மழை குறுக்கிட்ட நிலையில், வீரர்கள் அனைவரும் ஓய்வறைக்கு திரும்பினர். ஆனால் மழை நிற்காமல் பெய்ததால், போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சோகத்துடன் வெளியேறினர். அதேபோல் சூர்யகுமார் யாதவின் ரசிகர்களும் சோகம் அடைந்தனர். 

- Advertisement -

ஏனென்றால் கடந்த 10 இன்னிங்ஸ்களில் சூர்யகுமார் யாதவ் 100 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். ஆசியக் கோப்பைத் தொடரில் மோசமான ஃபார்மில் சூர்யகுமார் யாதவ் இருந்த நிலையில், இந்தப் போட்டியில் அபாரமான ஃபார்மில் காணப்பட்டார். இதனால் ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, மழை வந்ததால் ஏமாற்றம் அடைந்தனர். 

- Advertisement -

சூர்யகுமார் யாதவ் சாதனை

இருந்தாலும் சூர்யகுமார் யாதவ் 2 சிக்சர்கள் அடித்ததன் மூலமாக மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 5வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். 86 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் 150 சிக்சர்களை விளாசி இருக்கிறார். 

இந்தப் பட்டியலில் இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான ரோகித் சர்மா 151 இன்னிங்ஸ்களில் விளையாடி 205 சிக்சர்கள் விளாசி முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் 91 இன்னிங்ஸில் 187 சிக்ஸ் விளாசி ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த முகமது வசீம் என்ற வீரர் உள்ளார். அதேபோல் நியூசிலாந்து அணியின் கப்தில் 118 இன்னிங்ஸில் 173 சிக்சர்களுடனும், பட்லர் 132 இன்னிங்ஸில் 172 சிக்சர்களும் விளாசி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles