ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 41வது ஆட்டத்தில் பலமான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீழ்த்தி மிகுந்த நம்பிக்கை பெற்றுள்ளது. தோல்விக்கான காரணங்கள் குறித்து சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசி இருக்கிறார்.
இப்போட்டியில் டாஸ் இழந்த சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்து வீசியது. பின்னர் பேட்டிங்கைத் தொடங்கிய பெங்களூர் அணி தொடக்கம் சிறப்பாக அமைந்தது. நான்கு ஓவர்களில் 48 ரன்கள் குவித்த நிலையில் அணியின் கேப்டன் டூப்ளசிஸ் 12 பந்துகளில் 25 ரன்கள் குவித்து வெளியேறினார்.
பின்னர் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 51 ரன்கள், பட்டிதார் 20 பந்துகளில் 50 ரன்கள், கேமரூன் கிரீன் 37 ரன்களும் குவித்ததால் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை குவித்தது. இந்த முறை சன்ரைசர்ஸ் அணிக்கு பந்துவீச்சு கை கொடுக்கவில்லை. இதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் அணி களம் இறங்கியது.
அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் இந்த முறை ஒரு ரன்னில் வில் ஜாக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேற, சன்ரைசர்ஸ் அணியின் சரிவு அங்கேயே ஆரம்பித்தது. அதற்குப் பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெடுகளை இழந்ததால் 35 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி தோல்வியை தழுவியது. அந்த அணியில் அதிகபட்சமாக சபாஷ் அகமது 37 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார்.
எனவே தோல்விக்கு பின்னர் பேசிய சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ்
“இன்றைய இரவு எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. பேட்டிங் செய்யும்போது சில விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இழந்து விட்டோம். அதிரடி ஆட்டம் நாங்கள் முதலில் பேட்டிங் செய்யும்போது எங்களுக்கு கை கொடுக்கிறது. எங்கள் அணி வெற்றி பெறுவதற்கு முன்னால் நாங்கள் பந்து வீசக்கூடிய அணி என்று நினைத்துக் கொண்டிருந்தோம்.
தோல்வியடையும்போது பயிற்சியாளர் வெட்டோரியும், வெற்றியடையும் போது நானும் பேசுவோம். எங்கள் வீரர்கள் தற்போது சிறப்பான முறையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் இது டி20 கிரிக்கெட். இதைப் பொறுத்தவரை வெற்றி தோல்வி என்பது சாதாரணம்தான். எனவே இந்த தோல்வி குறித்து பெரிதாக கவலைப்பட வேண்டியது இல்லை. எனவே நாங்கள் அதிரடியாக விளையாடுவதுதான் ஒரே வழியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க:பொய்யான நம்பிக்கையை அணிக்கு கொடுக்க முடியாது.. வெற்றி பெற 100 சதவீதம் உழைக்க வேண்டும்.. வெற்றிக்கு பின்னர் பேசிய டு பிளஸ்சிஸ்
எனவே இதே போன்ற அணுகுமுறையில் விளையாடும் போது தொடர்ந்து வெற்றிகளை பெற முடியாது சில தோல்விகள் வரத்தான் செய்யும். இருப்பினும் அதிரடியாக விளையாடுவதால் தான் எங்களால் நல்ல ஸ்கோரை பதிவு செய்ய முடிகிறது. எனவே இதே முறையில் விளையாடுவதையே விரும்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

