பொய்யான நம்பிக்கையை அணிக்கு கொடுக்க முடியாது.. வெற்றி பெற 100 சதவீதம் உழைக்க வேண்டும்.. வெற்றிக்கு பின்னர் பேசிய டு பிளஸ்சிஸ்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது. வெற்றிக்கான காரணம் குறித்து சில முக்கிய கருத்துகளை அணியின் கேப்டன் பாப் டூ பிளஸ்சிஸ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஹைதராபாத் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பனிப்பொழிவு பற்றிய கவலை எதுவும் இல்லாமல் தைரியமாக பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு நல்ல பலனும் கிடைத்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு ரஜத் பட்டி தார் 50 ரன்கள், விராட் கோலி 51 ரன்கள், கேமரூன் கிரீன் 37 ரன்கள் குவிக்க 20 ஓவர்களில் ஆர்சிபி அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. பந்து வீச்சு தரப்பில் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை உனத் கட் சிறப்பாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் ஒரு ரன்னில் ஜாக்ஸ் பந்து வீச்சில் வெளியேற, அதற்குப் பிறகு ஆர்சிபி அணியின் சிறப்பான பந்துவீச்சினால் இலக்கை அடைய முடியாமல் 35 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக ஷசாஸ் அகமத் 37 பந்தில் 40 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் சிறப்பான வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளஸ்சிஸ் வெற்றிக்கான காரணங்கள் குறித்து கூறும் பொழுது
“கடந்த இரண்டு போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் மிகுந்த நம்பிக்கையை கொடுத்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 270 ரன்கள் இலக்கை கிட்டத்தட்ட நெருங்கி 260 ரன்கள் வரை கொண்டு வந்தோம். கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஒரு ரன்னில் தோல்வி அடைந்தோம்.

- Advertisement -

முழுமையான நம்பிக்கையை பெற போட்டியை வெற்றி பெற வேண்டும். எதையும் போலியாக அணியினருக்கு நம்பிக்கையை கொடுத்து விட முடியாது. 100% பங்களிப்பை களத்தில் வழங்கினால் தான் வெற்றி பெற முடியும். இப்போது எங்கள் அணியில் நிறைய வீரர்கள் ரன்கள் குவிக்கிறார்கள். முதலில் விராட் கோலி மட்டுமே விளையாடி வந்தார். இதற்குப் பிறகு கேமரூன் கிறீன், பட்டிதார் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

இதையும் படிங்க:பலே திட்டத்துடன் களமிறங்கிய ஆர்சிபி.. இதை ஏன்யா முன்னாடியே பண்ணல.. 35 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்சை வீழ்த்தி சிறப்பான வெற்றி

சின்னச்சாமி மைதானம் எங்களுக்கு பெரிய ஏமாற்றம். அந்த மைதானத்தில் பந்து வீசுவது மிகவும் கடினம். அங்கு பந்து வீசுவது குறித்து நிறைய முயற்சிகளை மேற்கொண்டோம் ஆனால் அது மிகவும் கடினமானது” என்று கூறி இருக்கிறார். பல தோல்விகளுக்கு பிறகு ஆர்சிபி அணி தங்களது இரண்டாவது வெற்றியை ருசித்து இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணிக்கு இது மூன்றாவது தோல்வியாகும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles