சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 78 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தாலும் தனது ஆட்டமுடியை மாற்றப் போவதில்லை என்று சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. மிகச் சிறப்பாக விளையாடிய அணியின் கேப்டன் ருத்ராஜ் இரண்டு ரன்களில் எதிர்பாராத விதமாக சதத்தை தவற விட்டு வெளியேறினார். 54 பந்துகளை எதிர்கொண்ட அவர் 98 ரன்கள் குவித்தார். சிறப்பாக விளையாடிய மற்றொரு ஆட்டக்காரர் டாரி மிச்சல் 32 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார்.
இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய சிவம் தூபே 20 பந்துகளில் 39 ரன்கள் குவிக்க சென்னை அணி 212 ரன்கள் குவித்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியது. முந்தைய போட்டியில்ஆடுகளத்தை கணிக்காமல் அதிரடியாக விளையாடப் போய் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வி அடைந்தது.
ஆனால் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் இந்த முறையும் அதேபோல தவறை செய்தது. அதிரடியாக விளையாட போய் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் துஷார் தேஷ் பாண்டேவின் வேகத்தில் வீழ்ந்தனர். பின்னர் மார்க்ரம் சிறிது நேரம் விளையாட மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினர். அதிகபட்சமாக மார்க்ரம் 26 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். கடைசியில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் சன்ரைசர்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சென்னையிடம் சந்தித்தது. இதன் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறி சன்ரைசர்ஸ் அணையை நான்காவது இடத்திற்கு தள்ளி இருக்கிறது. இந்த தோல்வி குறித்து சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறும் பொழுது
“நாங்கள் பெரிதாக எதுவும் திட்ட போடவில்லை. இந்த இலக்கை துரத்த நாங்கள் சரியானவர்களாக இருப்போம் என்று நினைத்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக எங்களால் வெல்ல முடியாமல் போனது.
எனவே இதற்கான சரியான வழியை கண்டுபிடிக்க வேண்டும் டி20 கிரிக்கெட் தற்போது வேறு ஒரு இடத்திற்கு சென்று விட்டதாக நினைக்கிறேன். இது போன்ற கிரிக்கெட் விளையாட அதிரடி பேட்ஸ்மேன்கள் கண்டிப்பாக தேவை. எங்களுக்கு கிடைத்த அதிரடியான பேட்ஸ்மேன்கள் சரியானவர்கள். எங்கள் திட்டத்தில் மாற்றம் எதுவும் செய்யப் போகவில்லை.
இதையும் படிங்க:நானெல்லாம் இங்கு விளையாடுவேனா.? என்னை உள்ளே அனுமதிப்பார்களா?. என்று ஏங்கியது உண்டு.. கிரிக்கெட் வீரர் நடராஜன் உறுக்கம்
வெளிப்படையாகச் சொன்னால் எனக்கு எந்த கவலையும் இல்லை. எங்கள் பேட்ஸ்மேன்கள் சிறந்த கிரிக்கெட் தற்போது விளையாடிக் கொண்டிருக்கின்றனர் இது டி20 கிரிக்கெட். எனவே எங்கள் ஆட்டமுறையை மாற்றிக் கொள்ளாமல் நாங்கள் இதேபோன்று விளையாடி அடுத்தடுத்த போட்டிகளில் மீண்டு வர முயற்சிப்போம்” என்று கூறியிருக்கிறார்.

