ஐபிஎல் தொடரில் கிட்டத்தட்ட ஏழு தோல்விகளுக்குப் பிறகு பலமான சன்ரைசர்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தாலும், விராட் கோலியின் மெதுவான பேட்டிங் சுனில் கவாஸ்கரை விமர்சனம் செய்ய வைத்திருக்கிறது.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி பவர் பிளே வரை ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் குவித்திருந்தது. போட்டியை சிறப்பாக பவுண்டரியுடன் தொடங்கிய விராட் கோலி பவர் பிளேவரை சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். பெங்களூர் அணி விளையாடிய விதத்தை பார்த்தபோது 240 ரன்கள் குவித்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் டூப்ளஸ்சிஸ் மற்றும் வில்ஜாக்ஸ் ஆட்டம் இழந்த பிறகு, விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் வெகுவாகவே குறைந்தது. இந்த குறைந்த ரன் வேகத்தை மற்றொரு பேட்ஸ்மேன் ஆன பட்டி தார் மீட்டெடுக்கும் முயற்சியில் அதிரடியாக விளையாடினார். குறிப்பாக மார்க்கண்டேவின் ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்களை விளாசி அணியின் ரன்களை வெகுவாக உயர்த்தி விட்டார்.
விராட் கோலி மொத்தம் 43 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 51 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்து வெளியேறினார். குறிப்பாக பவர் பிளேவிற்கு பிறகு விக்கெடுகளை இழந்ததால் அவர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. இருப்பினும் ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் தான் ஆட்டம் இழந்து வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் விராட் கோலியின் பேட்டிங் குறித்த இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது விமர்சனத்தை கூறியுள்ளார். 30 ரன்களை தாண்டிய பிறகு அவர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை என்று கூறி இருக்கிறார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது
“போட்டியில் பேட்டிங்கின் நடுவே விராட் கோலி தனது பேட்டிங் டச்சை இழந்து விட்டார். எனக்கு சரியாக நினைவில்லை. ஆனால் முப்பது ரன்கள் தாண்டிய பிறகு அவர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை என்பதை மட்டும் அறிவேன்.
ஆட்டத்தில் நாள் முடிவில் துவக்க வீரராக களமிறங்கி 14 ஓவர்கள் வரை விளையாடிவிட்டு 118 ஸ்ட்ரைக் ரேட்டில் செல்கிறீர்கள். இதை உங்கள் அணி உங்களிடமிருந்து இதை நிச்சயமாக எதிர்பார்த்து இருக்காது” என்று கூறி இருக்கிறார். மேலும் இந்த வெற்றியின் மூலம் விராட் கோலியின் பேட்டிங் மீது பெரிதளவில் விமர்சனம் எழாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுனில் கவாஸ்கரின் கருத்துக்கு ஆர்சிபி ரசிகர்கள் தங்களது பதிலடி கொடுத்து வருகின்றனர். பவர் பிளேவிற்கு பிறகு இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால், அணியை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு விராட் கோலி இடம் இருக்கிறது. அதனால்தான் ராஜத் பட்டிதார் பொறுப்பை உணர்ந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார் என்று ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

