நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து சொந்த மைதானத்தில் கூட அணியை சரியாக தேர்வு செய்ய முடியவில்லை என்று சிஎஸ்கேவின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் புலம்பி இருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. சிஎஸ்கேவின் கேப்டன் ருத்ராஜ் சிறப்பாக விளையாடி 60 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். இவருக்கு பக்கபலமாக சிவம் தூபே 66 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களில் 200 ரன்களுக்கு மேல் குவித்த நிலையில் எப்படியும் இந்த போட்டியில் வெற்றி பெற்று விடலாம் என்று சென்னை அணி நினைத்தது.
பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய லக்னோ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் டீ காக் தீபக் சாகரின் பந்து வீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 16 ரன்களில் வெளியேற, முன்னணி வீரர்கள் இருவரின் விக்கட்டை வீழ்த்தியதால் ஆட்டம் சென்னை அணியை நோக்கி மெல்ல நகர்ந்தது.
ஆனால் அதற்குப் பிறகு களம் இறங்கிய ஸ்டாய்னிஷ் ஒரு புறம் நங்கூரமாக நிலைத்து நின்று அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். சிஎஸ்கே அணியின் ஆறு பந்துவீச்சாளர்களாலும் இவரின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.இதனால் இறுதியில் லக்னோ அணி 213 ரன்கள் குவித்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. அபாரமாக விளையாடிய ஸ்டாய்னிஸ் 64 பந்துகளில் 123 ரன்கள் குவித்தார்.
போட்டிக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் சொந்த மைதானத்தில் கூட சரியாக அணியை தேர்வு செய்ய முடியவில்லை, முந்தைய போட்டியில் ஸ்பின் பந்துவீச்சுக்கு ஆடுகளம் நன்றாக ஒத்துழைத்தது. ஆனால் இன்றைய போட்டியில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் மேலும் விரிவாக கூறும்போது
“முதலில் ஒரு பிட்ச் இருந்தது. அது ஸ்பின் பந்துவீச்சுக்கு நன்றாக ஒத்துழைத்தது. அதை வைத்து எங்களால் போட்டியில் வெல்ல முடிந்தது. ஆனால் இன்றைய போட்டியில் ஸ்பின் பந்துவீச்சுக்கு ஆடுகளம் சரியாக ஒத்துழைக்கவில்லை. எங்களது திட்டமும் ஆடுகளமும் ஒன்றாக இருக்கும் போதுதான் போட்டியில் வெல்ல முடியும் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க:எச்சரிக்கை மணி அடித்த அம்பானி.. இனி ஜெயிக்கலனா கேப்டன்சியை விட்டு போயிடு.. என்ன நடந்தது?
வெட்கத்தை விட்டு சொல்ல வேண்டுமென்றால் இது எங்களது சொந்த மைதானம். இங்கு சரியான அணியை தேர்வு செய்தால்தான் போட்டியில் வெற்றி பெற முடியும். சரியான அணியை தேர்வு செய்யவில்லை என்றால் போட்டியில் வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினம் எங்களுக்கு இந்த போட்டியில் சரியான அணி அமையவில்லை” என்று கூறி இருக்கிறார்.

