எச்சரிக்கை மணி அடித்த அம்பானி.. இனி ஜெயிக்கலனா கேப்டன்சியை விட்டு போயிடு.. என்ன நடந்தது?

ஐபிஎல் 2024ஆம் ஆண்டு சீசனை பொருத்தவரை முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தற்போது வரை ஒரு சோகமான சீசனாகவே இருந்து வருகிறது. இதுவரை எட்டு போட்டியில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் தோல்வியும், மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றியும் பெற்றிருக்கிறது.

- Advertisement -

இனி மும்பை அணி விளையாடும் 6 போட்டிகளில் குறைந்தது ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்வது குறித்து நினைத்துப் பார்க்க முடியும். மும்பை அணி கடைசியாக 2020ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றிருந்தது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியவில்லை அதிலும் ஒரே ஒரு ஆண்டு மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு வந்திருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாகவே மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆக நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்டதற்கு காரணம் குஜராத் அணியில் அவரது கேப்டன்சி செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது. 2022ம் ஆண்டு குஜராத் அணியை ஐபிஎல் பட்டம் பெற வைத்தார். மேலும் 2023ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார்.

- Advertisement -

இவரை மும்பை அணியின் கேப்டனாக நியமித்தால் மும்பை அணியை சாம்பியன் பட்டம் பெற வைப்பார் என்று நம்பியே கேப்டனாக நியமித்தது. ஆனால் இவரும் தற்போது கேப்டன்ஷியில் தொடர்ந்து சொதப்பலான பங்களிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். மேலும் குஜராத் அணியில் பயிற்சியாளர் நெக்ரா இவருக்கு பக்கபலமாக இருந்தார்.

ஆனால் அவரைப் போல தற்போது மும்பை அணியில் யாரும் இல்லை இதனால் ஹர்திக் பாண்டியா தடுமாறுகிறார் என்ற ஒரு தகவல் வெளி வருகிறது. மேலும் ரசிகர்களும் இவருக்கு எதிராக எழுப்பும் கரகோஷங்கள் இவரை மனதளவில் பாதிப்படைய வைத்திருப்பதாக சில தகவல்களும் வெளி வருகிறது. மேலும் கடந்த போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்தபோது ஹர்திக் பாண்டியா வீரர்களிடம் குறை இருப்பதாக கூறினார்.

- Advertisement -

இது மும்பை நிர்வாகத்தை சற்று எரிச்சல் அடைய வைத்திருப்பதாக கூற படுகிறது. மேலும் போட்டியின் போது தோற்ற வருத்தமே இல்லாமல் கேவலமாக சிரித்துக் கொண்டே பேட்டி கொடுப்பது இன்னும் நிர்வாகத்தை எரிச்சல் அடைய வைத்திருக்கிறது. இனிவரும் போட்டிகளில் மும்பை அணியை வெற்றி பெறவில்லை என்றால் கேப்டன்சியை விட்டு விலகிச் செல்லும்படி அறிவுறுத்தி இருப்பதாக செய்திகள் கூறுகிறது.

இதையும் படிங்க:எந்த பந்துவீச்சாளரை அடிக்கணும்னு தெளிவாக இருந்தோம்.. பூரான் வந்ததுக்கு அப்புறம்தான் ஆட்டம் மாறுச்சு.. ஆட்டநாயகன் விருது பெற்ற ஸ்டாய்னிஸ் பேட்டி

இதனால் இனி வரும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஹர்திக் பாண்டியா இருக்கிறார். மேலும் அவருடைய பேட்டிங்கும் பவுலிங்கும் அணிக்கு பிரச்சினையாகி வருகிறது. இரண்டிலுமே அவரால் தற்போது பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. எனவே இந்த குறைகளை சரி செய்து இனிவரும் போட்டிகளில் வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles