விராட் கோலிக்கு காத்திருக்கும் ஆப்பு.. பிளே ஆப்னாலே கோலிக்கு ஆகாது போல.. இதுல எங்க கப் வாங்குறது.. கூறும் புள்ளிவிபரம்

இன்று நடைபெற உள்ள எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கனவே முதல் பிளே ஆப் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று இரண்டாவது எலிமினேட்டர் போட்டி நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்தத் தொடரை பொருத்தவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர்ச்சியாக ஆறு வெற்றிகளை பெற்று ப்ளே ஆப் சுற்றுக்குள் முன்னேறி இருக்கிறது. தொடக்கத்தில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று ஏழு தோல்விகளை சந்தித்த நிலையில் அதற்குப் பிறகு ஆறு வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்றுள்ளது.

- Advertisement -

அதிலும் கடைசியாக நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை வீழ்த்தி மிக வலுவாக எலிமினேட்டர் போட்டியை எதிர்கொள்ள உள்ளது. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை தொடக்கத்தில் சிறப்பான வெற்றிகளை பதிவு செய்த அணி அதற்குப் பிறகு தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்து தற்போது அதன் பார்ம் சற்று கவலைக்குரிய வகையில் அமைந்துள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணியை பொருத்தவரை விராட் கோலி அணியின் முக்கிய தூணாக விளங்குகிறார். இதுவரை விளையாடி உள்ள 14 போட்டிகளில் ஒரு சதமும், நான்கு அரை சதங்கள் என 708 ரன்கள் விளாசி இருக்கிறார். இதுவரை மிகச் சிறப்பாக இருந்து வரும் அவரது பார்ம் கடந்த ஆண்டுகளில் எலிமினேட்டர் சுற்றுகளில் அவரது பேட்டிங் ஃபார்ம் கவலைக்குரிய வகையில் அமைந்துள்ளது.

இதுவரை நான்கு முறை எலிமினேட்டர் போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணியில் விராட் கோலி நான்கு முறையும் பேட்டிங்கில் சொதப்பியது தெரியவந்துள்ளது. 2015ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 12 ரன்கள், 2020ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆறு ரன்கள், 2020ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக 39 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

அதேபோல 2022 ஆம் ஆண்டு லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 25 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்துள்ளார். விராட் கோலி பவர் பிளேவில் சிறப்பாக விளையாடி கொடுத்தால் அதை வைத்துப் போட்டியை எடுத்துச் செல்லும் பெங்களூர் அணி, தற்போது நடைபெற உள்ள ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் பந்து வீச்சாளர்கள் விராட் கோலியைக் கட்டுப்படுத்துவதே முதன்மையான நோக்கமாக வைத்திருப்பார்கள்.

இதையும் படிங்க:கிரிக்கெட் களத்தில் வயதுக்கு வேலை இல்லை.. யாரும் பாவமெல்லாம் பார்க்க மாட்டாங்க.. வெளிப்படையாக கூறும் தோனி

இந்த சூழ்நிலையில் எலிமினேட்டர் போட்டியில் விராட் கோலிக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பது சற்று கவலைக்குரிய வகையில் அமைந்துள்ளது. மேலும் விராட் கோலிக்கு பிரச்சனை அளிக்க கூடிய இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் போல்ட் மற்றும் பர்கர் ராஜஸ்தான் அணியில் இருப்பதால் இன்றைய போட்டியில் விராட் கோலி ஆட்டம் எப்படி இருக்க போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles