இதுதான் கடைசி உலக கோப்பைனு யார் சொன்னா.? அவரு இன்னொரு உலக கோப்பையும் விளையாடுவாரு.. ஸ்ரீகாந்த் பேட்டி

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தன முதல் போட்டியில் அயர்லாந்து அணியை வெற்றி பெற்று மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லாததால் இந்த முறை நிச்சயமாக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் அணியில் உள்ள சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இதுவே கடைசி உலக கோப்பையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சீனியர் வீரர் குறித்து முன்னாள் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

2022ஆம் ஆண்டு உலக கோப்பை தோல்விக்கு பிறகு ஹர்திக் பாண்டியா தலைமையிலான டி20 அணியே பெரும்பாலும் சர்வதேசத் தொடர்களில் களமிறங்கியது. ஆனால் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக சில காலம் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருக்க மீண்டும் ரோகித் சர்மா டி20 அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார்.

- Advertisement -

மேலும் மற்றொரு சீனியர் வீரரான விராட் கோலியும் திரும்பவும் இந்திய அணிக்குள் நுழைந்து தனது சிறப்பான பேட்டிங் பார்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு இந்த உலகக் கோப்பையே கிட்டத்தட்ட கடைசி உலக கோப்பையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முன்னாள் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் விராட் கோலிக்கு இது நிச்சயமாக கடைசி உலக கோப்பையாக இருக்காது என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் தெரிவிக்கும் பொழுது
“விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஒன்றாக இணைந்து விளையாடும் கடைசி உலக கோப்பையாக இருக்குமா? என்று கேட்டால் ஆமாம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் 2026ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இந்தியாவில் விளையாடப்படுகிறது. அதனால் அதை மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்தியாவில் டி20 உலக கோப்பை விளையாட அனைவருமே விரும்புவார்கள். மேலும் விராட் கோலி வைத்திருக்கும் பிட்னஸ் காரணமாக அவரால் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பையிலும் பங்கு பெற முடியும். இது விராட் கோலிக்கு கடைசி உலக கோப்பையாக இருக்க வாய்ப்பு இல்லை. அடுத்த உலக கோப்பையில் விளையாட விராட் கோலி மிகுந்த ஆர்வமாக இருப்பார். ஏனெனில் அவர் இன்னும் டி20 உலக கோப்பையை வென்றது கிடையாது.

இதையும் படிங்க:இந்தியாவைப் போல் இல்லை என்று குறை சொல்லக்கூடாது.. எல்லாவற்றிற்கும் தயாராக இருக்க வேண்டும்.. ஆட்டநாயகன் விருது பெற்ற பும்ரா பேட்டி

ரோகித் சர்மா 2007ஆம் ஆண்டு இந்திய அணி வென்ற போது அந்த அணியில் இருந்தார். ஆனால் விராட் கோலி இல்லை. ரோகித் சர்மா 2023ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதற்கு ஆர்வமாக இருந்தார். ஆனால் அது நடைபெறாமல் போனது. அதனால் இந்த முறை உலக கோப்பையை நிச்சயம் கைப்பற்ற வேண்டும் என்ற உறுதியோடு ரோகித் சர்மா இருக்கிறார். எனவே தம்மை தாண்டி நாட்டுக்காக இந்த கோப்பையை வெல்ல வேண்டும் என ரோகித் சர்மா கட்டாயம் நினைப்பார்” என்று கூறியிருக்கிறார்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles