ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வருகிற ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் குறைவான ஸ்ட்ரைக்ரேட்டில் விளையாடி வரும் விராட் கோலி ஐபிஎல்-லை வைத்து மதிப்பிடாதீர்கள் என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் முடிந்து நடைபெற இருக்கும் முக்கியமான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் முழு வீச்சில் சிறந்த வீரர்களை தேர்வு செய்து வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களை வைத்தும் உலகக் கோப்பை தேர்வு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற குறைந்த வேகம் கொண்ட ஆடுகளங்களில், விராட் கோலியின் பேட்டிங் ஸ்லோவாக இருக்கும் என்பதால் அவரை உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யக்கூடாது என்று ஜெய்ஷா தரப்பு கூறி இருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும் ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் செயல்பாடு வைத்து அவரை தேர்வு செய்வது குறித்து இறுதியான முடிவு செய்யப்படும் என அஜித் அகர்க்கர் தலைமையிலான தேர்வு குழு முடிவு செய்தது.
ஆனால் ஐபிஎல் தொடரில் விராட் கோலி மிகவும் குறைவான ஸ்டிரைக் ரேட்டிலேயே விளையாடி வருகிறார். அதிக ரன்கள் குவித்ததற்கான ஆரஞ்சு தொப்பி அவர் வசம் இருந்தாலும், தொடக்கத்தை அதிரடியாக விளையாடும் கோலியால் பின்னர் அதிரடியாக விளையாடி ஸ்ட்ரைக் ரேட் உயர்த்த முடிவதில்லை. இந்த நிலையில் விராட் கோலி ஐசிசி உலக கோப்பைக்கு தேர்வு செய்யக்கூடாது என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்த நிலையில், முன்னாள் தேர்வு குழு தலைவர் ஆன கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஐபிஎல்-லை வைத்து விராட் கோலியின் தரத்தை மதிப்பிட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
ஐபிஎல் தொடருக்கும் சர்வதேச தொடருக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இது குறித்த அவர் கூறும் பொழுது
” ஜெய்ஸ்வால் என்னுடைய அணியில் இடம் பிடிப்பதற்கு வலுவான வீரர் ஆவார். ஆனால் என்னை பொருத்தவரை ரோகித் சர்மாவுடன் விராட் கோலி டி20 உலக கோப்பையில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும்.
ஏனென்றால் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் யார் இறங்கப் போகிறார்கள்? நீங்கள் என்ன தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறீர்கள் இவற்றை வைத்து அணியை நிலையை காண வேண்டும். தேர்வு குழு தலைவராக சில நேரங்களில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். ஜெய்ஸ்வால் ஒரு சிறப்பான வீரர். ஆனால் விராட் கோலி டி20 உலக கோப்பை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும். ஐபிஎல் தொடர் டி20 உலக கோப்பை காண அடிப்படை அளவுகோலாக இருக்கவே கூடாது. ஐபிஎல் என்பது உள்நாட்டு தொடர். ஆனால் உலகக்கோப்பை என்பது சர்வதேச தொடராகும்.
இதையும் படிங்க:27 பந்து 84 ரன்.. எப்பா என்ன அடி.. மும்பை அணியை நொறுக்கிய இளம் வீரர் மெக்கர்க்.. 120 பந்துகளில் 257 ரன்கள் குவித்தது டெல்லி அணி
அந்தப் பெரிய தொடரில் சர்வதேசத் திறமைகளை பார்க்க வேண்டும். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் யார் அதிகாரி வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார் என்பதை பார்க்க வேண்டும். சர்வதேச அணையில் கடந்த கால பங்களிப்பு ஃபார்ம் மற்றும் பிட்னஸ் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஐபிஎல் என்பது ஒரு அளவுகோல் மட்டுமே. ஆனால் அதை வைத்து உலகக் கோப்பை அணி தேர்வு செய்யக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.

