27 பந்து 84 ரன்.. எப்பா என்ன அடி.. மும்பை அணியை நொறுக்கிய இளம் வீரர் மெக்கர்க்.. 120 பந்துகளில் 257 ரன்கள் குவித்தது டெல்லி அணி

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான 43வது ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் பந்துவீச்சை டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கி இருக்கிறார்கள். டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரேசர் மெக்கர்க் 27 பந்துகளில் மிக அதிரடியாக விளையாடி 84 ரன்கள் குவித்திருக்கிறார்.

- Advertisement -

டெல்லியின் சொந்த மைதானமான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி டெல்லி அணியின் இன்னிங்சை இளம் வீரரான மெக்கர்க் மற்றும் அபிஷேக் பொரேல் ஆகியோர் தொடங்கினர். பேட்டிங்க்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்த இரு அதிரடி ஆட்டக்காரர்களும் தங்கள் அதிரடியை வெளிப்படுத்தினார்கள்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த இளம் வீரர் முதல் பந்தில் இருந்தே பவுண்டரியும், சிக்ஸரையும் விளாசினார். 7.3 ஓவர்களில் 114 ரன்கள் இருந்த போது தங்களது முதல் விக்கெட்டை பறி கொடுத்தது. அபாரமாக விளையாடிய மெக்கர்க் 27 பந்துகளில் 11 பௌண்டரிகளையும், ஆறு சிக்ஸர்களையும் விளாசி 84 ரன்கள் குவித்தார். இவரது பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 311.11 ஆக அமைந்துள்ளது. இந்த இளம் வீரர் பும்ராவையும் விட்டு வைக்கவில்லை.

- Advertisement -

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பொரேல் 27 பந்துகளில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 36 ரன்கள் விளாசினார். அதற்குப் பிறகு களம் இறங்கிய சாய் ஹோப் 17 பந்துகளில் 5 சிக்சர்களை விலாசி 41 ரன்கள் குவித்தார். அதற்கு பிறகு களமிறங்கிய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 19 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என 29 ரன்கள் குவித்தார்.

பின்னர் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஸ்டெப்ஸ் 24 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் இரண்டு சிக்சர்கள் என 47 ரன்கள் விளாசினார். இதனால் டெல்லி அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் குவித்துள்ளது. இப்போட்டியில் மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் பும்ராவை தவிர அதிக ரன்கள் வாரி வழங்கியுள்ளனர்.

- Advertisement -

இந்த போட்டியில் வாய்ப்பு பெற்ற லுக் வுட் நான்கு ஓவர்கள் பந்துவீசி 68 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். பும்ரா நான்கு ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். நுவான் துசாரா நான்கு ஓவர்களில் 56 ரன்களும் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா இரண்டு ஓவர்களில் 41 ரன்களையும் வாரி வழங்கியுள்ளனர்.

இதையும் படிங்க:அடி ஆத்தி.. சிஎஸ்கே வெளியே ஆர்சிபி உள்ளே.. ரசிகர் போட்ட பிளே ஆப் கணக்கு.. ஆடிப்போன சென்னை ரசிகர்கள்

இந்த இன்னிங்ஸில் மும்பை பந்துவீச்சாளர்கள் யார்க்கர் மற்றும் பவுன்சர் பந்துகளை பெருமளவில் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மெகா இலக்கை நோக்கி மும்பை அணி தற்போது களமிறங்க உள்ளது. மும்பை அணியும் வலுவான பேட்டிங் வரிசை உள்ளதால் இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles