அடி ஆத்தி.. சிஎஸ்கே வெளியே ஆர்சிபி உள்ளே.. ரசிகர் போட்ட பிளே ஆப் கணக்கு.. ஆடிப்போன சென்னை ரசிகர்கள்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த தொடரில் ஏழு தோல்விக்கு பிறகு சமீபத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. இதுவரை 9 போட்டியில் விளையாடியுள்ள பெங்களூர் அணி இரண்டு போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் தழுவி இருக்கிறது.

- Advertisement -

ஏறக்குறைய பெங்களூர் அணியின் பிளே ஆப் கனவு சிதைந்து விட்ட நிலையில், பெங்களூர் அணியின் தீவிரமான ரசிகர் ஒருவர் ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல இவையெல்லாம் சாதகமாக நடக்க வேண்டும் என்று கால்குலேட்டரை கையில் எடுத்து கணக்கை போட்டு இருக்கிறார். இவர் போட்ட கணக்கின்படி நடந்தால் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

- Advertisement -

ஆனால் எதிர்பாராதவிதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியே செல்லும் விதமாக அமைந்திருக்கிறது. சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் வெற்றி பெற்ற பெங்களூர் அணி இனி வருகிற ஐந்து போட்டியிலும் வெற்றி பெற வேண்டும்.

- Advertisement -

இனி பெங்களூர் அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஒரு போட்டியும், குஜராத் அணியுடன் இரண்டு போட்டியும், பஞ்சாப் மற்றும் டெல்லி அணியுடன் தலா ஒரு போட்டியும் இருக்கின்றன. எனவே இனி வருகிற 5 போட்டியிலும் பெங்களூர் அணி வெற்றி பெற வேண்டும். அப்போது பெங்களூர் அணிக்கு 14 புள்ளிகள் கிடைக்கும்.

இதில் ஏழு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எஞ்சியுள்ள 6 போட்டிகளில் மூன்று போட்டியில் வெற்றி பெற்றால் 20 புள்ளிகள் உடன் முதலிடத்தை பிடிக்கும். ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள சன்ரைசர்ஸ் அணி மேலும் இனி வருகிற ஆறு போட்டியில் 5 போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் 20 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தை பிடிக்கும்.

- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏற்கனவே 5 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இனி வருகிற ஆறு போட்டிகளில் 3 போட்டியில் வெற்றி பெற்று பதினாறு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடிக்கும். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே நான்கு வெற்றிகளை பெற்றிருக்கும் நிலையில், இனி வரும் ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவ வேண்டும்.

இதையும் படிங்க:ஷஷாங்க் சிங் 28 பந்தில் 68 ரன்.. என்னால சந்தோஷப்பட முடியல.. ஸ்டெயின் வருத்தம்.. காரணம் என்ன.?

அவ்வாறு நடந்தால் 12 புள்ளிகள் உடன் சிஎஸ்கே அணி ஐந்தாவது இடத்தை பிடிக்கும். ஏற்கனவே 14 புள்ளிகளை பெற்றிருக்கும் பெங்களூர் அணி நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுகிறது. இதில் மீதம் இருக்கிற லக்னோ, மும்பை, டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் 12 புள்ளிகளையும் குஜராத் அணி 10 புள்ளிகளை மட்டுமே பெற வேண்டும். இவையெல்லாம் பெங்களூர் அணிக்கு சாதகமாக நடந்தால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெறலாம். இந்த பெங்களூர் அணி ரசிகர் போட்ட கணக்கினால் வெளியே செல்லும் சிஎஸ்கே அணியை பார்த்து சென்னை ரசிகர்கள் ஆடித்தான் போய் உள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles