பஞ்சாப் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 261 ரன்கள் இலக்கை சேஸ் செய்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது. இந்த வெற்றியில் பஞ்சாப் அணியின் இளம் வீரர் சசாங்க் சிங்கின் முக்கிய பங்கு இருப்பதால் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேல் ஸ்டெயின் அவரை பாராட்டிப் பேசியிருக்கிறார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் குவித்தது. பந்து வீச்சில் மிகவும் மோசமாக செயல்பட்ட பஞ்சாப் அணி ரன்களை வாரி வழங்கினர். சுனில் நரேன் 32 பந்துகளில் 71 ரன்களும், பில் சால்ட் 37 பந்துகளில் 75 ரன்கள் குவித்தனர். இதனால் கொல்கத்தா அணி மிகப்பெரிய இலக்கை பஞ்சாப் அணிக்கு நிர்ணயித்தது.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி பிரபு சிம்ரன் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் மிகச் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். பிரபு சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் குவித்து அதிரடியான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அதற்குப் பிறகு வந்த ரூசோ பதினாறு பந்தில் 26 ரன்கள் குவிக்க, ஒரு பக்கத்தில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ஜானி பேர்ஸ்டோ மிகச் சிறப்பாக விளையாடினார்.
கடைசி 8 ஓவர்களில் 80 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்பட்ட நிலையில், களமிறங்கிய சஷாங்க் சிங் 28 பந்துகளை மட்டுமே சந்தித்து இரண்டு பௌண்டரிகள் 8 சிக்ஸ்கள் என 68 ரன்கள் குவித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகள் விளையாடி இரண்டு அரை சதங்களுடன் 263 ரன்கள் குவித்துள்ளார். இவர் தன்னுடைய கடின உழைப்பின் மூலம் இந்த நிலையை எட்டி இருக்கிறார். இவர் முன்னர் ஐதராபாத் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான டேல் ஸ்டெயின் கூறும் பொழுது
“சஷாங்க் சிங்க்காக என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. சில வருடங்களுக்கு முன்னால் அவர் எங்களுடன் ஹைதராபாத் அணியில் இருந்தவர். அவர் ஒரு கடினமான உழைப்பாளி. திறமையான பையன் அவர் அனிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுப்பார். அவரது முகத்தில் எப்போதுமே ஒரு புன்னகை தவலும் மகிழ்ச்சி இருக்கும். அது நமக்கு நல்ல உத்வேகத்தை பெற்றுக் கொடுக்கும். வெல்டன் நண்பரே நீங்கள் எல்லாவற்றுக்கும் தகுதியானவர்!” என்று கூறி இருக்கிறார்.
ஸ்டெயினின் இந்தப் பதிவை தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர். தனது 32 வயதில் சாதித்த இந்த இந்திய வீரர் பலருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். கடினமாக உழைத்தால் யாரும் நினைத்ததை சாதிக்கலாம் என்பதற்கு இவர் ஒரு நல்ல உதாரணம்.
இதையும் படிங்க:523 ரன்கள்.. 42 சிக்ஸ்.. உடைந்த 9 மெகா சாதனைகள்.. பஞ்சாப் கொல்கத்தா வேர்ல்ட் ரெக்கார்ட்.. முழு பட்டியல்
பஞ்சாப் அணியால் இந்த ஏலத்தில் தவறுதலாக வாங்கப்பட்ட வீரர் தற்போது பஞ்சாப் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருப்பது அவரது கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதுவரை பஞ்சாப் அணிக்காக 263 ரன்கள் குவித்துள்ள ஷஷாங்க் சிங் அவருடைய பேட்டிங் சராசரி 65 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 182 ஆகவும் இருக்கிறது.

