எங்களுக்காக இந்தியா கூட விளையாடுங்க.. நாங்க நிறைய உங்களுக்கு செஞ்சிருக்கோம் – இலங்கை கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள்

நாளை இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்க இருக்கும் ஐசிசி டி 20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் உருக்கமான முறையில் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான் சென்று விளையாடிய பொழுது இலங்கை அணி தாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மற்ற அணிகள் அங்கு செல்வதை நிறுத்தின. இருந்தபோதிலும் இலங்கை அணியை மீண்டும் அங்கு சென்று விளையாடி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷம்மி சில்வா எழுதிய கடிதத்தில் ” நாங்கள் உங்களுக்கு நெருக்கடியான காலகட்டங்களில் நிறைய உதவிகள் செய்திருக்கிறோம். இந்த நிலையில் நீங்கள் எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படாத வகையில் இந்திய அணிக்கு எதிராக டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும்”

- Advertisement -

“இந்த உலகக் கோப்பை தொடருக்கு இலங்கை பாகிஸ்தான் இந்தியா மட்டுமல்லாமல் வெளியிலிருந்து நிறைய எதிர்பார்ப்புகள் இந்த முறை ஏற்பட்டு இருக்கிறது. டிக்கெட்டுகள் மிகவும் வேகமாக விற்று போய்விட்டன. இப்போது விளையாடாவிட்டால் சேவை மற்றும் சுற்றுலாத் துறைக்கு எங்களுக்கு பெரிய இழப்பு ஏற்படும். எனவே பாகிஸ்தான் இந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles