சிஎஸ்கே தோல்வி எதிரொலி.. நான் பார்த்தேன்.. தோனியின் உண்மையான குணம் அப்போது வெளிப்பட்டது.. கூறுகிறார் சைமன் டவுல்

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருந்தது. பிளே ஆப் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியும் இருந்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணி தனது கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து வெற்றி பெற்ற பிறகு ஆர்சிபி கேப்டன் பாப் டு பிளசிஸ் கை கொடுக்க வந்த போதும் மகேந்திர சிங் தோனி அதை கண்டு கொள்ளாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார் என்று வர்ணனையாளர் சைமன் டவுல் கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடக்கத்தில் ஒரு வெற்றியை பெற்று இருந்தாலும் அதற்குப் பிறகு வரிசையாக தோல்வியடைந்து பிளே ஆப் சுற்றை விட்டு வெளியேறும் நிலைக்கு ஆளானது. அதற்குப் பிறகு அணியில் நேர்மறையான சூழ்நிலைகளை உருவாக்கி, தேவையான மாற்றங்களை செய்து அதற்குப் பிறகு தொடர்ச்சியாக வெற்றிகளை பெற ஆரம்பித்தது.

- Advertisement -

தனது கடைசியில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்ற சூழ்நிலையில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. அந்த வெற்றிக்கு பின்னர் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டோம் என்ற உற்சாகத்தில் ஆர்சிபி அணியினர் அளவுக்கு அதிகமாகவே மைதானத்தில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

சிஎஸ்கே வீரர்கள் கைகொடுக்க நின்ற போதிலும், அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் சிஎஸ்கே அணியில் மகேந்திர சிங் தோனி, ருத்ராஜிடம் கூறிவிட்டு டிரெஸ்ஸிங் ரூமிற்குள் சென்று விட்டார். இதனை அடுத்து மகேந்திர சிங் தோனி செய்தது தவறு என்றும், வீரர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் விமர்சிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த வர்ணனையாளர் சைமன் டவுல் ஆர்சிபி கேப்டன் கை கொடுக்க வந்த போதும் மகேந்திர சிங் தோனி மைதானத்தை விட்டு வெளியேறினார் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது நான் மைதானத்தில் இருந்தேன். ஆர்சிபி அணி வெற்றி பெற்றதும் தோனியை கட்டிப்பிடிக்க பெங்களூர் கேப்டன் ஃபாஸ்ட் டு ப்ளஸ்சிஸ் வந்து கொண்டிருந்தார். ஆனால் மகேந்திர சிங் தோனி மைதானத்தை விட்டு வெளியேறி விட்டார். இதனால் விராட் கோலியும் தோனிக்கு கை கொடுக்க பின்னால் செல்ல வேண்டி இருந்தது.

இதையும் படிங்க:ஆர்சிபி தோல்வி.. மனதளவில் பாதிப்படைந்தாரா கோலி.? டி20 உலக கோப்பையில் பங்கு பெற தாமதம்.. காரணம் என்ன?

ஒரு அணி தோல்வி அடைந்தால் அந்த அணி வீரரின் உண்மையான குணம் அப்போது வெளிப்படும். மகேந்திர சிங் தோனியும் சென்னை அணி தோல்வி அடைந்தபோது பெங்களூர் வீரர்களின் அதிகமான கொண்டாட்டத்தினால் அவ்வாறு செய்திருக்கலாம். இதனால் அவரது பிரியாவிடை அழிந்து விட்டதாக நினைத்திருக்கக்கூடும்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles