பைனல் நினைத்து எல்லாம் கவலை இல்லை.. எங்க கூட கம்பீர் பாய் இருக்காரு.. கேகேஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு நடைபெற உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பங்கு பெற இருக்கின்றன.

- Advertisement -

இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், இருவரும் அவர்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை இந்த இரண்டு அணிகளும் தொடக்கத்தில் இருந்து மிக வலுவாக இருந்தது.

- Advertisement -

கொல்கத்தா அணி இந்த சுற்றில் 14 போட்டிகளில் 9 போட்டிகள் வெற்றி பெற்று, மூன்று போட்டிகளில் மட்டும் தோல்வி அடைந்திருந்தது. ஒரு போட்டி மழையால் ரத்தானது. அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 14 போட்டிகளில் 8 போட்டிகள் வெற்றி பெற்று ஐந்து போட்டிகள் தோல்வியடைந்து ஒரு போட்டி மழையால் ரத்தானது.

- Advertisement -

இந்த இரண்டு அணிகளும் மோதிய பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. சன்ரைசர்ஸ் அணி இரண்டாவது இடத்தை பிடித்ததால் பிளே ஆப் சுற்றை விட்டு வெளியேறாமல் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணயுடன் மோதியது.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணி இன்று நடைபெற உள்ள கொல்கத்தா அணியுடன் திரும்பவும் மோத இருக்கிறது. இந்த இறுதிப் போட்டி குறித்து சன்ரைசர்ஸ் அணியின் பேட் கம்மின்ஸ் கூறும் பொழுது ‘இறுதிப்போட்டி கடந்த போட்டியை போல இருக்காது எனவும் இந்த போட்டிக்காக தங்களது வீரர்கள் ஆற்றலை சேமித்து வைத்திருக்கிறார்கள்’ எனவும் கூறியிருந்தார்.

- Advertisement -

பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இறுதி போட்டி குறித்து கூறும் பொழுது
“இந்தப் போட்டியின் ஹைப் மீடியாக்களால் உருவாக்கப்படுகிறது. என் மனநிலை எப்படி இருக்கிறது என்பது கூட நீங்கள் உருவாக்குவது தான். ஆனால் கம்பீர் பாயைப் பொருத்தவரை விளையாட்டு எப்படி விளையாட வேண்டும் என்பதில் அவருக்கு அபார அறிவு இருக்கிறது. அவர் கொல்கத்தா அணிக்காக இரண்டு முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்து இருக்கிறார்.

இதையும் படிங்க:சிஎஸ்கே தோல்வி எதிரொலி.. நான் பார்த்தேன்.. தோனியின் உண்மையான குணம் அப்போது வெளிப்பட்டது.. கூறுகிறார் சைமன் டவுல்

அதனால் இந்த போட்டியை எப்படி அணுக வேண்டும் என்பதில் அவர் யுத்தியை வைத்திருக்கிறார். எதிரணிக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் பெரும் பங்கு அவரிடம் இருக்கும். இதே வேகத்தை நாங்கள் இறுதிப் போட்டியிலும் தொடர்ந்து வெற்றி பெறப் போகிறோம்” என்று கூறி இருக்கிறார். இரண்டு அணி கேப்டன்களுமே புதிய அணியுடன் இறுதி போட்டிக்கு வந்திருக்கின்றனர். ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்த போது இறுதிப் போட்டி வரை வந்து மும்பை அணியிடம் தோல்வி அடைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles