நேற்று சிஎஸ்கே அணி தங்கள் சொந்த மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிவோம் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. இந்த வெற்றிக்கான காரணங்கள் குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.
நேற்றைய போட்டியில் ருதுராஜ் மற்றும் இளம் வீரர் கார்த்திக் சர்மா இருவரும் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் அரைசதங்கள் அடித்தார்கள். இவர்களுக்கு இடையே 75 பந்து 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது.
இதுகுறித்து ருதுராஜ் பேசும்போது “இந்த போட்டியை பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக ஆரம்பித்த போதும் அவர்கள் ஆட்டத்திற்கு உள்ளே அதிரடியாக வந்தார்கள். ஆனால் இறுதியில் நாங்கள் அவர்களை கட்டுப்படுத்தியதால் அவர்களால் 20 முதல் 30 ரன்கள் எடுக்க முடியாமல் போனது எங்களுக்கு நன்மையாக அமைந்தது”
“எங்கள் அணியில் இளம் வீரர்கள் சிறப்பாக இருப்பதால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பினோம். கார்த்திக் சர்மா வேகம் மற்றும் சுழலில் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். அவர் ஒரு முறை செட் ஆகிவிட்டால் அவர் நிறைய ரன்கள் அடுத்த ஆண்டில் கொண்டு வருவார். அவருடைய நம்பிக்கை இப்பொழுது அதிகரித்திருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

