இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. சிறப்பாக விளையாடிய சிவம் துபே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
சமீபத்தில் நடந்த ஒரு நாள் உலகக் கோப்பைக்கு பிறகு ரோகித் சர்மா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில்தான் கேப்டனாக களம் இறங்குகிறார். எனவே களமிறங்கிய முதல் போட்டியிலேயே அவர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. விராட் கோலி தன் சொந்த காரணங்களுக்காக இந்த போட்டியில் விளையாடவில்லை. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 158 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக கில் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கினார். ஆப்கானிஸ்தான் அணியின் பரூக்கி வீசிய முதல் ஓவரை ரோகித் சர்மா எதிர்கொண்டார். முதல் பந்தை டாட் செய்த அவர் இரண்டாவது பந்தை இறங்கி வந்து களத்தின் மிட்பகுதியில் அடித்தார்.
பந்தை அடித்துவிட்டு சிங்கிள் எடுக்க ரோகித் சர்மா கில்லை அழைக்க, கில் அதை கவனிக்காமல் பந்தை மட்டுமே பார்த்துக் கொண்டு களத்தில் நின்று விட்டார். அதற்குள் ரோஹித் சர்மா கில் இருக்கும் திசையை நோக்கி ரன் எடுக்க ஓடி வர, கில் மறுமுனைக்கு செல்லாததால் விக்கெட் கீப்பர் குர்பாஸ் ரோகித் சர்மாவை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார். இதனால் ரோஹித் சர்மா கில்லை பார்த்து கோபத்தில் ஏதோ கூறிக்கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய ரோஹித் சர்மா
“கிரிக்கெட்டில் இது போன்ற விஷயங்கள் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் அந்த சமயத்தில் நீங்கள் விரக்தி அடைகிறீர்கள். அது தவிர்க்க முடியாத ஒன்று. நீங்கள் உங்கள் அணிக்காக ரன்களை அடிக்கவே களத்தில் இறங்குகிறீர்கள். ஆனால் அது எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாக நடக்காது. நாங்கள் இந்த போட்டியை வென்றுள்ளோம்.
கில் பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவர் சிறிது நேரத்திலேயே அவுட் ஆகி விட்டார். இந்த போட்டியில் நிறைய பாசிடிவ் விஷயங்கள் நடந்துள்ளன. திலக் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் பேட்டிங் செய்த விதம் அருமையாக இருந்தது. ரிங்கு சிங்கும் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். நாங்கள் வித்தியாசமான முயற்சிகளை தொடர்ந்து வெளிப்படுத்த விரும்புகிறோம். இன்று நீங்கள் இந்த போட்டியில் பார்த்தால் வாஷி 19 ஆவது ஓவரை வீசினார்.
ஆட்ட சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பந்து வீச்சாளர்களுக்கு சவாலான பகுதியில் பந்து வீச எங்களுக்கு நாங்களே சவால் விடுத்துக் கொள்கிறோம். உலகக்கோப்பைக்குத் தகுந்தவாறு அணியை தேர்வு செய்ய வேண்டும். அதனால் அணிக்குத் தேவையான நல்ல முயற்சியை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருக்க விரும்புகிறோம்” என்று கூறி இருக்கிறார்.

