பிப்ரவரி 19ஆம் தேதி துவங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 2023 50 ஓவர் உலகக் கோப்பையில் மிஸ் ஆனதை இம்முறை பிடிக்க வேண்டுமென கேப்டன் ரோஹித் ஷர்மா மும்முரமாக உள்ளார்.
கடந்த 3 மாதங்களாக ஃபார்ம் அவுட்டில் இருந்த ரோஹித் சமீபத்தில் நடந்த இங்கிலாந்து தொடரில் அபார சதம் மூலம் மீண்டும் பழைய ரோஹித் ஷர்மாவாக வந்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பான துவக்கத்தை தந்துள்ள இவர் இதே பார்மில் இருப்பது தான் இந்திய அணிக்கு நல்லது.
வருகிற ஞாயாற்றுக்கிழமை துபாயில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறுகிறது. கடைசியாக நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்று இருந்தது. அதற்கு பழி தீர்க்கும் போட்டியாக ரசிகர்கள் இதனைப் பார்க்கிறார்கள்.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு பெரிய தொந்தரவாக இருந்துள்ளார்கள். கடந்த முறை துபாயில் நடைபெற்றப் இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் கூட பாகிஸ்தான் அபாரமாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போட்டியில் இந்திய டாப் ஆர்டரை பாகிஸ்தான் வேகம் பந்தாடியது.
இதற்காக ரோஹித் ஷர்மா, வலைப் பயிற்சியில் யார்க்கர்கள் வீசச் சொல்லி ஸ்பெஷல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். வலைப் பயிற்சி முடிந்த பின்னர் அவைஸ் அஹமத் எனும் உள்ளூர் பவுலரைப் பெரித்தாகப் பாராட்டினார். அவர் கூறுதாவது, ” என்னுடைய காலை உடைக்கப் பார்த்தாய் நீ. அபராமனா இன் ஸ்விங் யார்க்கார்கள். எங்களுக்கு பயிற்சியில் உதவியதற்கு கடமைப் பட்டுள்ளோம். ” என்றார்.
பாகிஸ்தான் வேகம் ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப் ஆகிய பவுகர்களைச் சமாளித்து இந்திய அணி காட்டயாம் வெல்லும் சூழலில் உள்ளது. அப்படியானால் மட்டுமே அரை இறுதிப் போட்டிக்குத் தகுது பெறுவது உறுதியாகும்.

