ஹர்திக் பாண்டியாவால் தோனியின் பக்கத்தில் கூட நெருங்க முடியாது.. இந்த விஷயத்தில் அவர்தான் கில்லி – சிஎஸ்கே முன்னாள் வீரர்

19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாட இருக்கின்றன. சென்னை அணியின் எம்எஸ் தோனி தசைப்பிடிப்பு காரணமாக முதல் இரண்டு வாரங்களுக்கு விளையாட மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாக தரப்பிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது.

- Advertisement -

இருப்பினும் அதற்கடுத்து அவர் விளையாடும் போட்டிகளில் பெரும்பாலும் இம்பாக்ட் பிளேயராக மட்டுமே களமிறங்குவார் என்று தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. தற்போது எம்எஸ் தோனியின் நிலைமை சற்று மோசமாக இருந்தாலும் அவர் விளையாடிய காலகட்டத்தில் அவர்தான் மிகப்பெரிய பவர் ஹிட்டர் என்றும், தற்போது பெரிய பவர் ஹிட்டர் என்று கருதப்படும் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா தோனியின் பக்கத்தில் கூட வர முடியாது என்று சிஎஸ்கே முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா குறிப்பிட்டு இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ராபின் உத்தப்பா பேசும்போது ” எம் எஸ் தோனி கற்பனைக்கு எட்டாத ஒரு அசாத்திய வலிமை கொண்டவர். இன்றைய தலைமுறை வீரர்களால் அவருடைய பவர் ஹிட்ங்குக்கு நிச்சயமாக ஈடு கொடுக்க முடியாது. இளம் வயதில் எம் எஸ் தோனி அடித்த அடியில் ஹர்திக் பாண்டியா அவரது பக்கத்தில் கூட நெருங்க முடியாது. தோனியின் பேட்டில் பங்குபடும்போது எழும் அந்த சத்தம் நான் வேறு எங்கும் கேட்டது கிடையாது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles