ஹர்திக் பாண்டியா மீம்ஸ்களால் பாதிக்கப்பட்டுள்ளார்.. இவ்வளவு வன்மத்தைக் கக்கக் கூடாது.. ராபின் உத்தப்பா கருத்து

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஆக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி மூன்று போற்றுகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. 2020ஆம் ஆண்டிற்கு பிறகு மூன்று சீசன்களாக பெரிதும் சோபிக்காத மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு மாற்றத்தைக் கருத்தில் கொண்டு இந்த சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பாக ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது.

- Advertisement -

பிறகு குஜராத் அணியில் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கி கேப்டன் ஆக நியமித்தது. மும்பை இந்தியன் அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் பெரிய வெற்றிகளை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் பதவியை ஏற்றுக்கொள்ளாத மும்பை அணி ரசிகர்கள் மும்பை அணி விளையாடும் அனைத்து மைதானங்களுக்கும் சென்று ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் கரகோஷங்களை எழுப்பி வந்தனர். இதை ஹர்திக் பாண்டியா பெரிதாக காட்டிக் கொள்ளாத போதும் அது அவரை மனதளவில் காயப்படுத்தியது தெரிகிறது.

இதனால் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்த மும்பை அணி அதற்குப் பிறகு வெற்றி பாதைக்கு திரும்பியது. எனவே ஹர்திக் பாண்டியாவின் நிலைமை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறும் பொழுது
“ஹர்திக் பாண்டியா அவரைப் பற்றி பரவும் மீம்ஸ்களாலும், ட்ரோல்ஸ்களாலும் மனதளவில் காயமடைந்துள்ளார். இது அவருக்கு தனிப்பட்ட முறையில் அழுத்தத்தை உண்டாக்கியிருக்கிறது.

- Advertisement -

எந்த ஒரு வீரர் மீதும் இவ்வளவு வன்மம் இருக்க கூடாது. அவரைப் பற்றி பரவும் மீம்ஸ்களை நாம் அடுத்தவருக்கு பகிர்ந்து கொள்ள கூடாது” என்று கூறி இருக்கிறார். ஆனால் தற்போது அவருக்கு எதிராக எழும் கரகோஷங்கள் சற்று குறைந்துள்ளதாகவே தெரிகிறது. காரணம் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலி ரசிகர்களை அமைதியாக இருக்குமாறு கூறினார்.

இதையும் படிங்க:ஒரு இளம் வீரரை குறை கூறுவது சரியா? ரோகித் சர்மா என்றாவது இப்படி கூறியது உண்டா.? டூ ப்ளஸ்சிஸ் கூறியதற்கு சுரேஷ் ரெய்னா கண்டனம்

அப்போது ரசிகர்கள் அவரின் வார்த்தைக்கு மதிப்பளித்து அவருக்கு எதிராக கரகோஷங்கள் எழுப்புவதை நிறுத்தினர். இன்று நடைபெற உள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பலமான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அவரைப் பற்றி தனிப்பட்ட முறையில் வரும் கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் முழு வீச்சில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles