கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் பரிதாபமான தோல்வியை சந்தித்தது. இதற்கு முன்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் விளையாடிய போது ஏற்பட்ட தோல்விக்கு அணியின் கேப்டன் டு பிளஸ்சிஸ் இளம் வீரர் மயங்க் தாகரை குறிப்பிட்டு பேசியதற்கு சுரேஷ் ரெய்னா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நடைபெற்ற 19வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது.
இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பட்லரின் அபாரமான சதத்தால் 19வது ஓவரில் 189 ரன்கள் குவித்து சிறப்பான வெற்றி பெற்றது. அப்போட்டியின் தோல்விக்கு பின்னர் பேசிய டூபிளஸ்சிஸ் நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம். ஆனால் மயங்க் தாகர் வீசிய ஒரு ஓவரில் 20 ரன்கள் சென்று விட்டது. இதுவே நாங்கள் தோல்வியடைய காரணமாக அமைந்தது என்று கூறினார்.
இந்த நிலையில் பெங்களூர் அணியின் கேப்டன் கருத்துக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஒரு இளம் வீரரை இவ்வாறு பேசலாமா அது அவரது உத்வேகத்தை பாதிக்காதா? மேலும் இந்த தொடரில் நீங்களே சிறப்பாக விளையாடவில்லை என்று கூறி இருக்கிறார்.
சுரேஷ் ரெய்னா இது குறித்து கூறும் பொழுது
“ஒரு இளம் வீரரை செய்தியாளர் சந்திப்பின்போது இப்படி கூறுவது சரி கிடையாது. அப்படி கூறினால் அவரது உத்வேகம் என்னவாகும். அணியின் கேப்டன் டு பிளஸ்சிஸ் இதுவரை சிறப்பாக விளையாடாமல் இருக்கிறார் அப்படி இருக்கும் போது ஒரு இளம் வீரரை குறை சொல்வது நியாயமா? நான் டூப்ளஸ்சிஸ் உடன் பல ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். அவர் எனது மிக நெருங்கிய நண்பர் என்பதால் இதை கூறுகிறேன்.
ரோகித் சர்மாவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். அவர் என்றாவது ஒருநாள் இளம் வீரரைக் குறை கூறி இருக்கிறாரா? இளம் வீரர்களை அரவணைத்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். காஷ்மீரில் விரைவில் சுரேஷ் ரெயினா கிரிக்கெட் அகாடமி ஒன்றை ஆரம்பிக்க போவதாக கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:குஜராத் உலகத் தரமான சுழற்பந்து கூட்டணியை வைத்துள்ளனர்.. இந்தப் பெருமை சாய் கிஷோரையே சேரும்.. தோல்விக்கு பின்னர் சாம் கரண் பேட்டி
அங்குள்ள இளைஞர்கள் ஒரு கையில் பேட் பாலும் மறு கையில் துப்பாக்கியிடனும் சுற்றுகிறார்கள். எனவே அவர்களை துப்பாக்கி எடுப்பதை விடுவித்து பேட் பால் தொடுவதை ஊக்கப்படுத்த வேண்டும்” என்று சுரேஷ் ரெய்னா கூறி இருக்கிறார்.

