அவரு கடுமையாக உழைக்கிறாரு.. வாய்ப்பு தரணும்னு நினைச்சோம்.. வெற்றிக்குப் பின் ரிஷப் பண்ட் பேட்டி

ஐபிஎல் திருவிழாவில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி என 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.

- Advertisement -

விசாகப்பட்டினம் மைதானத்தில் டாசை இழந்த சென்னை அணி முதலில் பந்து வீச இறங்கியது. இதன்படி டெல்லி அணியின் இன்னிங்சை டேவிட் வார்னர் மற்றும் பிரித்விஷா ஆகியோர் தொடங்கி வைத்தனர். கடந்த இரண்டு போட்டிகளில் களமிறங்காததால் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் பிரத்விஷா. சென்னை அணியின் பந்துவீச்சை முதலில் பொறுமையாக எதிர்கொண்ட இருவர், அடுத்த மூன்று ஓவர்களில் தங்கள் அதிரடியைக் காட்டினர்.

- Advertisement -

ஓவர்க்கு பத்து ரன்கள் என்ற சரியான விகிதத்தில் ரன்ரேட் சென்று கொண்டிருந்தபோது, ஒன்பதாவது ஓவரில் இந்த ஜோடி பிரிந்தது. டேவிட் வார்னர் 52 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் 51 ரன்கள் குவிக்க பிரத்விஷா 43 ரன்கள் குவித்தார். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய பண்ட் 35 பந்துகளில் 4 பவுண்டரி, மூன்று சிக்ஸர்கள் என 51 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதனால் டெல்லி அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 191ரன்கள் குவித்தது. பின்னர் 192 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி தொடக்க விக்கெட்டுகளை முதல் ஏழு ரன்களில் பறி கொடுத்தது. அதன் பிறகு களம் இறங்கிய அனுபவ வீரர் ரகானே 45 ரர்களும் டேரி மிச்சல் 34 ரன்களும் குவித்து ஆட்டம் இழந்தனர்.

பின்னர் இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி பதினாறு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு நான்கு பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என விளாசி 37 ரன்கள் குவித்தார். இருப்பினும் கடைசி கட்டத்தில் ரன்கள் அதிகமாக இருந்ததால் டெல்லி 20 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்

- Advertisement -

“இன்று எங்கள் பந்துவீச்சாளர்கள் மிகவும் அற்புதமாக பந்து வீசினர். தோல்வியிலிருந்து நாங்கள் பாடத்தை கற்றுக் கொண்டுள்ளோம். பிரத்விஷா கடந்த இரு வாரங்களாக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். எனவே அவருக்கு சரியான வாய்ப்பை வழங்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். நினைத்தது போலவே இன்று அவர் தன்னை நிரூபித்து இருக்கிறார். முகேஷ் குமார் இன்று டெத் ஓவர்களில் அருமையாக பந்து வீசினார்.

இதையும் படிங்க :16 பந்து 37 ரன்.. மைதானத்தை அதிரவிட்ட தோனி.. 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

ஒரு கிரிக்கெட் வீரராக 100 சதவீத உழைப்பை நான் வழங்க வேண்டும். நான் கடந்த 1.5 வருட காலமாக கிரிக்கெட் விளையாடாததால் நான் பார்முக்கு வர சிறிது நேரம் எனக்கு பிடித்தது. இது என் வாழ்க்கை சார்ந்த விஷயம். என்ன நடந்தாலும் மீண்டும் களத்திற்கு திரும்பி வருவது என்ற மனநிலையுடன் நம்பிக்கையாக இருந்தேன்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles