6, 7 பேர் இருந்தும் என்ன யூஸ்.. ஒரு பொடி பையன எப்புடி தடுக்கணும்னு தெரில.. கோச்களை விமர்சித்த கைப்

கொழும்புவில் நடைபெற்ற இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை பேட்ஸ்மேன் சோனல் தினுஷாவை கட்டுப்படுத்த இந்திய அணி சரியான திட்டத்துடன் செயல்படவில்லை என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார். ஃபாலோ ஆன் பெற்ற நிலையிலும் தினுஷா சதமடித்து இலங்கை அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றி, போட்டியை டிராவில் முடிக்க முக்கிய காரணமாக இருந்தார்.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியிலேயே தினுஷா சதமடித்த பிறகு, அவரது பேட்டிங்கில் உள்ள பலவீனங்களை இந்திய அணி ஆராய்ந்திருக்க வேண்டும் என்று கைஃப் தெரிவித்துள்ளார். அடுத்த போட்டியில் அவரை வீழ்த்துவதற்கான திட்டத்தை பவுலர்கள், கோச்சிங் குழு மற்றும் வீடியோ அனலிஸ்ட்கள் இணைந்து உருவாக்கியிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆனால், இந்திய அணி போதுமான அளவுக்கு அட்டாக் செய்யாமல், ஒரு கிளப் போட்டியைப் போல செயல்பட்டதாகவும் கைஃப் சாடியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து முகமது கைஃப் கூறுகையில், “ஒவ்வொரு பேட்டருக்கும் ஏதாவது ஒரு பலவீனம் இருக்கும். அதை கண்டுபிடிப்பதுதான் அணியின் வேலை. நான் கில் மட்டும் குறித்து பேசவில்லை; பவுலிங் யூனிட் மற்றும் கோச்சிங் ஸ்டாஃப் அனைவரையும் பற்றித்தான் சொல்கிறேன். முதல் போட்டிக்குப் பிறகு அவரை எப்படி வீழ்த்துவது என்று திட்டமிட்டிருக்க வேண்டும். அவர் புல், ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை அதிகம் ஆடினார். ஆனால், கவர் டிரைவ் பவுண்டரி ஒன்றைக்கூட அடிக்கவில்லை. அவருக்கு எதிராக ஃபுல் லென்த்தில் பந்துவீசி அட்டாக் செய்திருக்க வேண்டும். ஆறு அல்லது ஏழு கோச்கள் மற்றும் வீடியோ அனலிஸ்ட் இருந்தும் இந்திய அணி இதை செய்யத் தவறிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles