ஐபிஎல் திருவிழா தற்போது வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல் அணியும் மோதின.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்த முறை தெளிவாக ஓபனிங் பிரத்விஷாவை களம் இறக்கி மிச்சல் மார்ஸை மிடில் ஆர்டருக்கு அனுப்பியது. முதல் மூன்று ஓவர்களை நிதானமாக எதிர்கொண்ட டெல்லி அணி அடுத்த மூன்று ஓவர்களை அதிரடியாக ஆடியது. பவர் பிளேவின் முடிவில் 62 ரன்களை விக்கெட் இழப்பின்றி குவித்தது.
பின்னர் 93 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை பறி கொடுத்தது டெல்லி அணி. 52 ரன்கள் குவித்த நிலையில் டேவிட் வார்னர் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் மூன்றாவது வரிசையில் அணியின் கேப்டன் ரிஷபந்த் களம் இறங்கினார். ஆட்டத்தின் சூழ்நிலையை நன்கு புரிந்து ஏதுவான பந்துகளை மட்டுமே பவுண்டரிக்கு விரட்டினார். அவரைத் தொடர்ந்து ப்ரித்விஷா 43 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
ஆல் ரவுண்டர் மிச்சல் மார்ஸ் 12 பந்துகளை எதிர்கொண்டு இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 18 ரன்கள் குவித்து வெளியேறினார். பின்னர் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய பண்ட் 32 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மூன்று சிக்சர்கள் என 51 ரன்கள் குவித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணிந்து ஐந்து விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.
பின்னர் 192 ரன்கள் குவித்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்தது. கேப்டன் ருத்ராஜ் 1 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற, கடந்த இரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா இப்போட்டியில் இரண்டு ரன்களுக்கு வெளியேறினார். பவர் பிளேவிற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் சென்னை அணி தடுமாறியது.
பின்னர் அனுபவ வீரர் ரகானே உடன் டாரி மிச்சல் இணைந்தார். இருவரும் சற்று நிதானமாக விளையாட 75 ரன்களுக்கு 3வது விக்கெட்டை பறிகொடுத்தது. டாரி மிச்சல் 34 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். பின்னர் அனுபவ வீரர் ரகானேவும் ஆட்டம் இழந்து வெளியேற, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் சென்னை அணி 120 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
இதயம் படிங்க:டைவ் அடித்து கேட்ச் பிடித்த குட்டி மலிங்கா.. வெகுவாகப் பாராட்டிய தல தோனி.. உற்சாகத்தில் ரசிகர்கள்
அதற்குப் பிறகுதோனி களம் இறங்கிய போது மைதானமே அதிர்ந்தது. மகேந்திர சிங் தோனி வெறும் 16 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு நான்கு பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 37 ரன்களை விளாசினார். இருப்பினும் 19ஆவது ஓவரை வீசிய முகேஷ் குமார் அபாரமாக பந்து வீசி வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.

