2025 ஐ.பி.எல் தொடரின் கடைசி லீக் போட்டியில் லக்னோ – பெங்களூர் அணிகள் மோதின. லக்னோ ஏற்கனவே வெளியேறிய நிலையில் இப்போட்டி பெங்களூர் அணிக்கு மட்டுமே மிக மிக முக்கியமானதாக அமைந்தது. இதில் வெற்றிப் பெற்றால் பஞ்சாப் அணியுடன் குவாலியர் 1இல் மோதும். இல்லையேல் மும்பை இந்தியன்ஸை எளிமினேட்டரில் சந்திக்க வேண்டும்.
டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது. இந்தப் போட்டிக்கும் ஜிதேஷ் ஷர்மா கேப்டனாக தொடர, ரஜ்த் பட்டிதார் இம்பாக்ட் பிளேயராக அமைந்தார். மார்க்கம் பதிலாக உள்ளே வந்த பிரெட்ஸ்கீ 14 ரன்களில் துஷாரா பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற அவுட் ஆனார். பின்னர் மார்ஷ் – பண்ட் ஜோடி சேர்ந்து பெங்களூர் பந்துவீச்சாளர்களை நாலாப் பக்கமும் அலையவிட்டனர்.
தொடர் முழுவதும் மிக மோசமான பேட்டிங்கை வெளிக்காட்டி ஏமாற்றமளித்த ரிஷப் பண்ட், இன்று அதிரடியைக் கையில் எடுத்தார். 27 கோடிகளுக்கு ஏலத்தில் எடுத்தது வீண் என கேலி வார்த்தைகள் பேசிய அனைவரது வாயையும் அடைத்தார். 29 பந்துகளில் அரை சதம் விளாசிய பண்ட், தொடர்ந்து பவுண்டரி மற்றும் சிக்சர்களை பறக்கவிட்டு 54 பந்துகளில் சதம் விளாசினார்.
சதம் அடிக்க பின்னர் சம்மர்சால்ட் அடித்து அதைக் கொண்டாடினார். பழைய அதிரடி பண்ட்டை மிகவும் சந்தோஷம். கடைசி வரை ஆட்டமிழக்காத பண்ட் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் என 61 பந்துகளில் 113 ரன்கள் சேர்த்தார். ஐ.பி.எல் வரலாற்றில் பண்ட்க்கு இது 2வது சதம் ஆகும். மறுபக்கம் மிட்செல் மார்ஷ் சிறப்பான ஃபார்மில் தொடர்ந்து, 67 ரன்கள் அடித்தார். 20 ஓவர்களில் லக்னோ சூப்பர் ஜெயன்டஸ் 227/3 என முடித்து.
மிகவும் முக்கியமான போட்டியில் பெங்களூர் அணி பல முட்டாள்தனமான முடிவுகளை எடுத்துள்ளது. கேட்டானா ஜிதேஷ் ஷர்மா பந்துவீச்சாளர்கள் ரொட்டேஷனில் பல தவறுகளை செய்துவிட்டார். சிறப்பான 2 ஓவர்கள் வீசிய க்ருனால் பாண்டியாவுக்கு பின்னர் ஓவர்கள் கொடுக்காமல் ரன்களை வாரி வழங்கிய ஷெப்பர்ட்க்கு 4 ஓவர்கள் கொடுத்து சுதப்பிவிட்டார்.

