இந்தியாவில் ரிட்டயர்டு ஆகி.. இனி இந்திய அணிக்கு எதிராக ஆடப்போறேன்.. உலக கோப்பையை வென்ற வீரர் பரபரப்பு பேட்டி

இந்தியாவில் உலகப் புகழ்பெற்ற விளையாட்டுகளில் ஒன்று கிரிக்கெட். 1983 வரை இந்திய மக்கள் மத்தியில் குறைவாக அறியப்பட்ட கிரிக்கெட் போட்டி இந்திய அணி  உலகக் கோப்பையை வென்ற பின்னர் அதன் புகழ் உலகம் முழுவதும் பரவியது. அப்போது கவாஸ்கர், கபில் தேவ், ஸ்ரீகாந்த் போன்ற வீரர்களால் தான் இந்திய மக்கள் மத்தியில் கிரிக்கெட் அதிகம் அறியப்பட்டது.

- Advertisement -

பின்னர் சச்சின், ஷேவாக், யுவராஜ், கம்பீர், தோனி என்று தொடங்கி தற்போது ரோஹித், கோலி வரை கிரிக்கெட்டில் நட்சத்திர வீரர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விளையாடப்படும் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடுவது என்பது மிகவும் கடினமான ஒன்று.

- Advertisement -

அண்டர் 19 கிரிக்கெட்டில் இருந்து தொடங்கி ரஞ்சி கிரிக்கெட் வரை பல இளம் வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு என்பது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். அப்படி வாய்ப்பு கிடைக்காதவர்களில் முக்கியமான வீரர் அண்டர் 19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனான உன்முக் சந்த்.

- Advertisement -

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான அண்டர் 19 உலக கோப்பையை இந்திய அணிக்காக வென்று கொடுத்தவர் உன்முக் சந்த். இவர் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாய்ப்பு கிடைக்காததால் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் இருந்து அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார்.

உள்நாட்டில் கிரிக்கெட்டிற்கு போதிய அளவு வருமானம் கிடைக்காத நிலையில் 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தார். அங்கு விளையாடிய முதல் மைனர் டி20 லீக் போட்டியில் சிலிக்கான் வேலி ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்று சாம்பியன் பட்டம் பெற உதவினார். மேலும் மூன்று சீசன்களில் 1500 ரன்கள் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

- Advertisement -

இவர் தற்போது அமெரிக்காவில் மூன்று ஆண்டுகள், 10 மாதங்கள் தங்கி மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கு விளையாடத் தகுதி பெற்று இருக்கிறார். இதுகுறித்து உன்முக் சந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில்
“நான் இந்தியாவிலிருந்து ஓய்வு பெற்றதற்குப் பிறகு எனது அடுத்த இலக்கு எப்போதுமே இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இது மிகவும் வித்தியாசமான உணர்வு. இது உலகின் சிறந்த அணிக்கு எதிராக என்னை நானே சோதித்துக் கொள்ள சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles