முதல் போட்டிக்கே இப்படி ஒரு சோகமா.. பாவம்பா ஆர்சிபி ஃபேன்ஸ்.. வெளிவந்து கொண்டிருக்கும் கலவையான செய்தி.. முழு விவரம்

18 வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழாவின் மீதமுள்ள போட்டிகள் இன்று முதல் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

58வது போட்டி இன்று ஆர்சிபி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெறும் நிலையில் ரசிகர்களுக்கு தற்போது ஒரு சோகமான செய்தி வெளிவந்துள்ளது.

- Advertisement -

18 வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் திருவிழா கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வந்த நிலையில் போர் பதற்றத்தின் காரணமாக 57 போட்டிகள் மட்டுமே நடைபெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் மீதமுள்ள போட்டிகள் இன்று முதல் நடைபெற உள்ள நிலையில் முதல் போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாட உள்ளன. இதில் கொல்கத்தா அணி ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறி விட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆனால் பெங்களூர் அணி 11 போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கும் நிலையில் 16 புள்ளிகள் உடன் அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு தயாராக இருக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலே பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். மேலும் பெங்களூர் அணியில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க வாய்ப்புகள் இல்லை என செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அனைத்து வீரர்களும் பங்கு பெறுவதாக தகவல்கள் வெளிவந்திருப்பது அந்த அணிக்கு மகிழ்ச்சியான விஷயமாக அமைந்துள்ளது.

மேலும் இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் போட்டி ஒருவேளை மழையால் பாதிக்கப்பட்டால் பெங்களூர் அணி கூடுதலாக ஒரு புள்ளி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். இருப்பினும் இது ரசிகர்களுக்கு சோகமான செய்தியாகவே அமைந்துள்ளது. ஒரு வாரம் கழித்து போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் முதல் போட்டி மழையால் பாதிக்கப்படுவது ரசிகர்களுக்கு சிக்கலான விஷயமாக உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க:இஷான் கிஷனுக்கு வாய்ப்பு.. ஸ்ரேயஸ் ஐயருக்கு கல்தா.. இந்திய ஏ அணியில் இருந்து புறக்கணித்த கவுதம் கம்பீர்!

இருப்பினும் இன்று மைதானத்தைச் சுற்றி வெளியே வந்து கொண்டிருக்கும் வானிலை அறிக்கையை பொறுத்தவரை மழையின் வாய்ப்பு 25 சதவீதம் உள்ளதாகவும், அங்கிருந்து மாலை 5 மணிக்கு 58 சதவீதமாகவும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இரவு 9 மணிக்கு மழையின் வாய்ப்பு 49 சதவீதமாக இருக்கிறது எனவும், அடுத்தடுத்து 34 சதவீதமாக குறைவது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும் பெங்களூர் மைதானத்தில் மழை நீர் வெளியேற இருக்க போதுமான வசதி இருப்பதால் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியாகவும் நடக்க வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles