இஷான் கிஷனுக்கு வாய்ப்பு.. ஸ்ரேயஸ் ஐயருக்கு கல்தா.. இந்திய ஏ அணியில் இருந்து புறக்கணித்த கவுதம் கம்பீர்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 16ம் தேதி தொடங்குகிறது. சுமார் 2 மாதங்களுக்கு மேலாக இந்திய அணி இங்கிலாந்தில் முகாமிட உள்ளது. ஏற்கனவே சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இளம் வீரர்களை தயார் செய்ய வேண்டிய பொறுப்பு இந்திய அணிக்கு உள்ளது.

- Advertisement -

இதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய ஏ அணியை இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் விளையாட வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்திய அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடுவதற்காக இந்திய ஏ அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

ஸ்ரேயஸ் ஐயருக்கு சோகம்

அந்த அணிக்கு கேப்டனாக அபிமன்யூ ஈஸ்வரன், துணைக் கேப்டனாக துருவ் ஜுரெல் சேர்க்கப்பட்டுள்ளனர். கருண் நாயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், கலீல் அஹ்மத் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயருக்கு இந்திய ஏ அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

- Advertisement -

கடந்த ஆண்டு நடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் ஸ்ரேயஸ் ஐயர் டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்படுவதில்லை. இந்திய ஒருநாள் அணியில் மட்டுமே ஸ்ரேயஸ் ஐயர் வாய்ப்பை பெற்று வருகிறார். ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய வீரர்களில் அதிக ரன்களை விளாசியதோடு, ஐபிஎல் தொடரிலும் பஞ்சாப் அணிக்காக மிகச்சிறப்பாக ரன்களை சேர்த்து வருகிறார்.

பிசிசிஐ உடன் மோதல்

அதுமட்டுமல்லாமல் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் எடுக்கும் முடிவுகள் அந்த அணிக்கு மிகப்பெரிய சாதகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் ஸ்ரேயஸ் ஐயர் இந்திய ஏ அணியில் சேர்க்கப்படவில்லை. இஷான் கிஷன் போன்ற ஃபார்மில் இல்லாத வீரர்களுக்கு கொடுக்கும் வாய்ப்பை ஸ்ரேயஸ் ஐயருக்கு கொடுத்தால், அவராலும் எளிதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்க முடியும்.

- Advertisement -

இதனால் விரைவில் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று, ஸ்ரேயஸ் ஐயர் விராட் கோலியின் இடத்தை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நிரப்புவார் என்று நம்பப்படுகிறது. ஆனாலும் அவருக்கும் பிசிசிஐ நிர்வாகிகளுக்கும் இடையிலான மோதல் காரணமாகவே அவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து இடம் மறுக்கப்படுவதாக விமர்சிக்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles