ஜாஸ் இங்கிலீஷை சும்மா விடமாட்டோம்.. எங்களுக்கு சரியான நியாயம் கிடைக்கணும்.. அதிரடி முடிவை எடுத்துள்ள பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான ஜாஸ் இங்கிலீஷ் மீது பஞ்சாப் கிங்ஸ் அணி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக விளையாடிய ஜோஷ் இங்கிலீஷ், தனக்கு அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கும் நேரத்தில் திருமணம் நடக்க உள்ளது எனவும் எனவே எனக்கு ஓய்வு தேவை என்று 45 நிமிடங்களுக்கு முன்பாக பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த நிர்வாகம் அவரை வெளியே விட முடிவு செய்து வெளியே விட, மினி ஏலத்தில் லக்னோ அணி 8.50 கோடி ரூபாய்க்கு அவரை ஏலத்தில் எடுத்துள்ளது.

- Advertisement -

தான் அதிக விலைக்குப் போய் இருப்பதால் தனது திருமண முடிவை மாற்றம் செய்து லக்னோ அணிக்காக ஜோஷ் இங்கிலீஷ் விளையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளிக்க இருப்பதாகவும் தற்போது வெளிவந்துள்ள தகவல்கள் கூறுகின்றன. இதனை விசாரித்து உண்மை பஞ்சாப் கிங்ஸ் அணி பக்கம் இருந்தால் ஜாஸ் இங்கிலீஷ் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles