அடுத்த வருடம் 19வது ஐபிஎல் தொடர் நடைபெற உள்ள நிலையில் அதற்கான மினி ஏலமானது இந்த மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஃபினிஷிங் ரோலில் செயல்படக்கூடிய ஆல் ரவுண்டர் வீரர் தேவை என்று இருக்கும் நிலையில் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் கேமரான் கிரீன் ஆகியோரில் ஒருவரை இந்திய அணி அதிக விலைக்கு வாங்க முயற்சிக்கும் என்று கூறப்பட்டது.
இந்த சூழ்நிலையில் ஏற்கனவே மேக்ஸ்வெல் மற்றும் ரசல் ஆகிய ஆல்ரவுண்டர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு மற்றும் விலகி இருக்கும் நிலையில் மேலும் சிக்கலில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வெங்கடேஷ் ஐயரை தங்கள் அணிக்கு இழுக்க ஆர்வம் காட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வெங்கடேஷ் ஐயர் கடந்த ஐபிஎல் தொடரில் கிட்டத்தட்ட 24 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வாங்கப்பட்டார். ஆனால் கடந்த சீசனில் அவரது செயல்பாடு பெரிய அளவில் இல்லை. இதனால் மினி ஏலத்திற்கு முன்பாக கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயரை கழட்டி விட்டு இருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதனை தங்கள் அனைத்து சாதகமாகிக்கொள்ள முயற்சிகள் எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

