2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் காயம் அடைந்து விலகிய போது, தோனி கேப்டன்சியை கையில் எடுத்தார். ஆனாலும் சிஎஸ்கே அணியால் கம்பேக் கொடுக்கவில்லை. இதனால் கடைசி இடத்தில் நிறைவு செய்தது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
விலகும் அஸ்வின்
அதற்கு சிஎஸ்கே அணியின் சீனியர் வீரர்கள் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடாததே காரணம். குறிப்பாக அஸ்வின் கொஞ்சம் கூட சிஎஸ்கே அணியில் செட்டாகவில்லை. இதனால் அஸ்வினை நீக்க வேண்டும் என்ற பேச்சுகள் தொடங்கின. எவ்வளவு முயன்றும் தோனியால், அஸ்வினை சிஎஸ்கே அணிக்குள் பொறுத்த முடியவில்லை.
இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக அஸ்வின் தன்னை அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே சூப்பர் கிங்ஸ் அகாடமியின் பொறுப்பில் இருந்து விலக அஸ்வின் முடிவு எடுத்துள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது. இதனால் விரைவில் அஸ்வினை விடுவிக்கும் அறிவிப்பு வரும் என்று பேசப்படுகிறது.
காரணம் என்ன?
இதற்கு பின்னணியில் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் காரணம் என்று கூறுகிறார்கள். அவர் நேரடியாக அஸ்வினுடன் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, சிஎஸ்கே அணியின் திட்டங்களை விளக்கி கூறி இருக்கிறார். ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக அஸ்வின் மற்றும் மற்றொரு வீரரை தாரை வார்க்க சிஎஸ்கே அணி முடிவு எடுத்துள்ளது.
இதனால் அஸ்வின் அவராகவே புரிந்து கொண்டு சிஎஸ்கே அணியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அஸ்வின் சிஎஸ்கே அணிக்கு கம்பேக் கொடுத்ததை கடந்த ஆண்டு கொண்டாடி வந்த சூழலில், ஒரே சீசனில் அஸ்வின் விலகும் முடிவுக்கு தள்ளப்பட்டிருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

