ஐபிஎல்லில் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள அணிகளில் ஒன்றான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தற்போது மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் தோல்வி பெற்று ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இனி ஆர்சிபி அணி வெற்றி பெற நினைத்தால் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட் கூறியிருக்கிறார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 173 ரன்கள் குவித்த போதிலும், அதனை சென்னை அணி எளிதாக சேஸ் செய்தது. அதன் பிறகு பஞ்சாப் அணியுடன் மோதிய பெங்களூர் அணி பஞ்சாப் அணி நிர்ணயத்தை 17 6 ரன்கள் இலக்கை விராட் கோலி அதிரடி பேட்டிங்கின் மூலம் சேஸ் செய்து வெற்றி பெற்றது.
அதன் பிறகு கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 182 ரன்கள் குவித்தும் அதனைக் கொல்கத்தா அணி 17 ஓவர்களிலேயே சேஸ் செய்து வெற்றி பெற்றது. புதிய சீருடை, புதிய பெயர் மாற்றம் என்று அதிரடியான மாற்றங்களை செய்து பெங்களூர் அணி இந்த சீசனில் களம் இறங்கினாலும் அதன் பந்துவீச்சு இன்னமும் பிரச்சனைக்குரியதாகவே இருக்கிறது.
பந்துவீச்சை பொறுத்தவரை 11.50 கோடிக்கு வாங்கப்பட்ட அல்ஜாரி ஜோசப் மூன்று போட்டிகளிலும் சேர்த்து ஒரே ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். அவரது பந்து வீச்சு எக்கானமி 11.9 ஆகும். இவர்களது பந்துவீச்சை பொறுத்த வரையில் முகமது சிராஜ் மட்டுமே கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கிறார். அவரும் அவ்வப்போது பந்து வீச்சில் சொதப்புகிறார்.
மேலும் பெங்களூர் அணியில் தரமான சுழற் பந்துவீச்சாளர்கள் இல்லாதது பெரும் குறையாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னால் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவட் பிராட் பெங்களூர் அணி கேமரூன் கிரீனை உட்கார வைத்து இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டும் என்று கூறி இருக்கிறார் இது குறித்த அவர் கூறும் பொழுது
“ஆர் சி பி அணி கேமரூன் கிரீனை நீக்கிவிட்டு டாப்லீ அல்லது லாக்கி பெர்குசன் என்ற இரு வலது கை வேகப்பந்து வீச்சாளர்கள் உடன் களமிறங்க வேண்டும். ஏனெனில் பந்துவீச்சு தான் அவர்களிடம் பெரிய பிரச்சினையாக உள்ளது. கேமரூன் கிரீன் போன்ற அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரரை நீக்குவது என்பது தைரியமான முடிவு தான். இருப்பினும் சீசனின் தொடக்கத்தில் அவர்களின் நம்பிக்கைக்கு தற்போது எதிராக உள்ளது.
இதையும் படிங்க :முன்னாள் சிஎஸ்கே வீரர் டி20 உலக கோப்பையில் விலகல்.. அதிர்ச்சி தரும் தகவல்.. காரணம் என்ன?
தற்போது அவர்களின் பந்துவீச்சு சமநிலையில் இருப்பதாக தெரியவில்லை. 180 முதல் 190 ரன்கள் வரை குவித்தும் அந்த அணி பாதுகாப்பாக கருதவில்லை என்றால் பந்துவீச்சில்தான் பிரச்சனை உள்ளது. இதேபோல் பேட்டிங்கில் விராட் கோலி, டு பிளஸ்சிஸ் மற்றும் மேக்ஸ்வெல் வலு சேர்க்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

