ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மே 26ஆம் தேதி நடைபெற்று முடிந்த உடன் டி20 உலக கோப்பை அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் வருகிற ஜூன் 5ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.
இதற்காக அனைத்து சர்வதேச அணிகளும் தங்களை முழு வீச்சில் ஆயத்தப்படுத்தி வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அரை இறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணியை இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 168 ரன்கள் குவிக்க அதற்குப் பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி 16 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்தது.
அதற்குப் பின்னர் நடைபெற்ற பாகிஸ்தான் அணி உடனான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 137 ரன்கள் இலக்கை வலுவான பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுக்கு எதிராக 52 ரன்கள் குவித்த பென் ஸ்ட்ரோக்ஸ் இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். இவரது முக்கியமான ஆட்டம் இங்கிலாந்து அணிக்கு கிடைக்காமல் இருந்தால் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருந்தது.
மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் போன்ற பெரிய டெஸ்ட் தொடர்களில் இவர் இங்கிலாந்து அணிக்காக தனி ஒரு ஆளாக வென்று கொடுத்த போட்டிகள் நினைவு இருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு தலை சிறந்த கிரிக்கெட் பிளேயர் வரும் டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்காக விளையாட மாட்டார் என்று அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது.
இது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சமீப காலமாக பந்து வீசுவதற்கு சிரமப்படும் பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து பந்துவீச்சில் ஈடுபட அதற்கான வேலைகளில் கவனம் செலுத்தி வருவதால் அடுத்து நடக்க இருக்கிற டி20 உலக கோப்பையில் பங்குபெற மாட்டார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 கிரிக்கெட்டில் வலுவான இங்கிலாந்து அணி பேட்டிங்கை பொருத்தவரை மிகவும் வலுவான அணிகளில் ஒன்றாகும். பந்துவீச்சு மட்டும் சிறிது கவலைகளுக்குரிய நிலையில் இருந்தாலும் டி20 உலக கோப்பைக்கு ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ச்சர் இந்தியாவில் உலக கோப்பைக்காக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதையும் படிங்க :இப்படியே போனா மரியாதை இருக்காது.. பாண்டியாவை எச்சரிக்கும் இந்திய முன்னாள் வீரர்
மேலும் டி20 உலக கோப்பைத் தொடர் முடிந்தவுடன் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஸஸ் தொடரில் பங்கு பெறுகிறது. அதற்காக இங்கிலாந்து வீரர்கள் முழு வீச்சில் தற்போது தயாராகி வருகின்றனர். பென்ஸ்டோக்ஸ் ஐபிஎல்லில் கடந்த 2023ஆம் ஆண்டு 16.25 கோடிக்கு சென்னை அணி வரை ஏலத்தில் எடுத்தது. ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடிய இவர் அதற்கு பிறகு காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

