ஆர்சிபி மதிப்பு ரூ.22,471 கோடி.. மும்பை, சிஎஸ்கே பக்கத்தில் வரவே முடியாது.. கதறுங்க மஞ்சள் ஜெர்சி

ஐபிஎல் தொடரில் அதிக மதிப்பு வாய்ந்த அணி என்ற சாதனையை ஆர்சிபி அணி படைத்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஆர்சிபி அணி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி கைப்பற்றியதால், அதன் மதிப்பு மொத்தமாக உச்சத்திற்கு சென்றுள்ளது.

- Advertisement -

டாப்பில் ஆர்சிபி

17 ஆண்டுகளில் மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகளை கடந்து ஆர்சிபி அணி அதிக மதிப்பு வாய்ந்த பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும். மொத்தமாக ஆர்சிபி அணியின் மதிப்பில் ரூ.2,247 கோடி அதிகரித்துள்ளது. அதேபோல் ஐபிஎல் தொடரின் மதிப்பும் நடப்பாண்டில் 13.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் மொத்தமாக ரூ.1.56 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக ஆர்சிபி அணியின் மதிப்பு ரூ.22,471 கோடியாகவும், மும்பை அணியின் மதிப்பு ரூ.20,207 கோடியாகவும், சிஎஸ்கே அணியின் மதிப்பு ரூ.19,622 கோடியாகவும், கேகேஆர் அணியின் மதிப்பு ரூ.18,954 கோடியாகும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் மதிப்பு ரூ.12,859 கோடியாகவும், ராஜஸ்தான் அணியின் மதிப்பு ரூ.10,855 கோடியாகவும், டெல்லி அணியின் மதிப்பு ரூ.10,020 கோடியாகவும் உள்ளது.

- Advertisement -

பஞ்சாப் அணியின் வளர்ச்சி

தொடர்ந்து குஜராத் அணியின் மதிப்பு ரூ.9,602 கோடியாகவும், பஞ்சாப் அணியின் மதிப்பு ரூ.11,773 கோடியாகவும், லக்னோ அணியின் மதிப்பு ரூ.9,185 கோடியாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த சீசனை விடவும் பஞ்சாப் அணியின் மதிப்பு இம்முறை 39.3 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கு அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஆகியோர் முக்கிய காரணமாக இருக்கின்றனர்.

கடந்த சீசனில் சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் நிறைவு செய்தது. இதன் காரணமாகவே 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அடுத்த சீசனில் சிஎஸ்கே அணி விட்ட இடத்தை பிடிக்க தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஆர்சிபி அணி உச்சத்திற்கு சென்றிருப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles