நாங்கள் பிளே ஆப் செல்வோம் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது.. இந்த 2 விஷயங்களும் தற்போது நன்றாக உள்ளது.. கூறுகிறார் ஆர்சிபி பயிற்சியாளர் ஆன்டி பிளவர்

நடப்பு ஐபிஎல் தொடர் தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டி இருக்கிறது. இதுவரை 51 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறி இருக்கிறது.

- Advertisement -

மீதமுள்ள ஒன்பது அணிகளும் தற்போது பிளே ஆப் சுற்றில் நீடிக்கின்றன. இதில் புள்ளி பட்டியலில் தற்போது பத்தாவது இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் தழுவி தற்போது ஆறு புள்ளிகளுடன் 10 வது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

எனவே ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இனி வரும் நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் 14 புள்ளிகள் உடன் மற்ற அணிகளின் வாய்ப்பை பொருத்து தகுதி பெறும். மேலும் இன்று குஜராத் அணியுடன் ஆட்டத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றால் புள்ளிகள் பட்டியலில் குஜராத் தனியை பின்னுக்கு தள்ளிவிட்டு எட்டாவது இடத்திற்கு முன்னேறும்.

- Advertisement -

முதல் இரண்டு இடங்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இருக்கும் நிலையில் அந்த இரு அணிகளும் கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றை உறுதி செய்துவிட்டன. மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு கிட்டத்தட்ட ஏழு அணிகள் போட்டி போடுகின்றன.

பிளே ஆப் செல்வது குறித்து ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் ஆன்டி பிளவர் கூறும் பொழுது
“நாங்கள் பிளே ஆப் செல்வோம் என்று நம்பிக்கை இன்னமும் இருக்கிறது. நாங்கள் தற்போது சிறந்த நிலையில் இருப்பதாக உணர்கிறோம். புள்ளிகள் பட்டியலில் தற்போது பத்தாவது இடத்தில் இருக்கிறோம். ஆனால் இந்த இடத்தை விட மேலே இருக்க விரும்பினோம். பிளே ஆப் செல்வோம் என்று இன்னமும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

- Advertisement -

எங்களது பேட்ஸ்மேன்கள் போட்டியின் போது ஆர்வமாக வந்து பேட்டிங் செய்வார்கள் என்று எங்களுக்கு தெரியும். மேலும் எங்களுடைய வேகப்பந்து வீச்சு தாக்குதல் நடத்துவதை கடந்த ஆட்டங்களில் பார்த்து ரசித்தேன். அது போன்ற சம்பவங்களை நான் மீண்டும் பார்க்க ஆசைப்படுகிறேன்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:சென்னை அணிக்கு காத்திருக்கும் பெரிய தலைவலி.. சவால்களை முறியடித்து சாதிக்குமா?. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தொடர்ந்து ஆறு தோல்விகளுக்கு பிறகு தற்போது பெங்களூர் அணி வெற்றிப்பாதைக்கு திரும்பி கடந்த இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று தற்போது வலுவான நிலையில் இருக்கிறது. இப்போதுதான் அந்த அணிக்கு பேட்டி மற்றும் பவுலிங் என சரியான காம்பினேஷனில் அமைந்திருக்கிறது. பெங்களூர் அணிக்கு கரன் ஷர்மா மற்றும் ஸ்வப்னில் சிங் ஆகியோர் தற்போது சிறப்பாக பந்து வீசி செல்கின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles