ஆர்சிபி அந்தப் பையன வாங்கினதுக்கு பதிலா.. திருடின மாதிரி இருந்துச்சு.. என்ன மாதிரி ஒரு பிளேயர் – அஸ்வின் வியப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற முடிந்த ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 கோடி ரூபாய்க்கு வெங்கடேஷ் ஐயர் மற்றும் 2 கோடி ரூபாய்க்கு நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி என இரண்டு முக்கிய வீரர்களை எடுத்தது. இந்த சூழ்நிலையில் இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நியூசிலாந்தின் வேக பந்துவீச்சாளர் ஜேக்கப் டஃபி என்ன மாதிரியான வீரராக இருக்கிறார் என்று பாருங்கள். அவர் கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் மட்டும் 23 விக்கட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இந்த ஆண்டு அவருக்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது. மேலும் தொடர் நாயகன் விருதையும் வென்றிருக்கிறார்.

- Advertisement -

மேலும் t20 கிரிக்கெட் பவுலர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார். மேலும் டி20 போட்டிகளில் 18 பவுலிங் ஆவரேஜ், ஒரு ஓவருக்கு 7.89 ரன்கள், 53 சதவீதம் டாட் பந்துகள், இத்துடன் 57 விக்கெட்டுகள் கைப்பற்றி வேற லெவல் திறமையுடன் இருக்கிறார். இப்படிப்பட்ட ஒருவரை தான் ஆர்சிபி அடிப்படை விளையாட இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது. இது முற்றிலும் சிறப்பான ஒரு திருட்டு போல இருந்தது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles