மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் போல்ட் முக்கிய மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டு உள்ளார்.
வாங்கடேவில் நடைபெற்ற இப் போட்டியில் டாசை இழந்த மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை அணிக்கு இத்தொடரில் எதுவுமே ஆரம்பம் சரியாக அமையவில்லை. போல்டுக்கு எதிராக எப்போதுமே தடுமாறும் ரோகித் சர்மா, இந்த முறை தான் சந்தித்த முதல் பந்திலேயே சஞ்சு சாம்சன் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த இரண்டு வீரர்களும் அடுத்தடுத்து தாங்கள் சந்தித்த முதல் பந்திலேயே போல்டிடம் ஆட்டம் இழந்தது மும்பை அணியின் வீழ்ச்சிக்கு அதுதான் அடித்தளமாக அமைந்தது.
இந்த விக்கெட்டை பயன்படுத்திய போல்ட் உண்மையிலே அற்புதமாக பந்து வீசினார். அதன் பிறகு மும்பை அணிக்கு திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி மட்டுமே சிறிது நேரம் கை கொடுத்து உதவினர். இருப்பினும் இந்த ஜோடியில் ஹர்திக் பாண்டியா 34 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்து வெளியேறினார். அதன் பிறகு திலக் வர்மா 33 ரன்களில் வெளியேற, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டிம் டேவிட் 24 பந்துகளில் வெறும் 17 ரன்கள் மட்டுமே குவித்த நிலையில் வெளியேறினார்.
இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே குவித்தது. வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட ராஜஸ்தான் அணி இந்த இலக்கு சற்று எளிதாகவே காணப்பட்டாலும் மும்பை அணி பந்து வீச்சாளர்களும் சற்று சிறப்பாகவே பந்து வீசி சஞ்சு சாம்சன், பட்லர், ஜெய்ஸ்வால் என்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு இருக்கும் ரியன் பராக் இந்த முறையும் களத்தில் நின்று விட்டார்.
சிறப்பாக விளையாடிய அவர் 39 பந்துகளில் 54 ரன்கள் குவித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதன்பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் போல்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார். இது குறித்த அவர் கூறும் பொழுது
முதல் ஓவரில் விக்கெட்டுகள் வீழ்த்துவது என்பது இந்த டி20 ஃபார்மெட்டில் எப்போதும் உறுதியாக சொல்ல முடியாது.
ஆனால் எனது பந்துவீச்சை பயன்படுத்தி புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் என்ன திட்டத்துடன் வந்தோமோ அதை டாஸ் வென்ற பிறகு நிறைவேற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதல் இரண்டு விக்கெட்டைகளை வீழ்த்தி பிறகு பேட்ங்கில் அழுத்தம் கொடுத்தோம். நான் ரோகித் சர்மாவுக்கு எதிராக நிறைய முறை விளையாடி உள்ளேன். அவருக்கு எதிராக ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் அது எல்லா நேரத்திலும் வேலை செய்யாது.
இதையும் படிங்க:நான் இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கு.. நினைச்ச மாதிரி எதுவுமே நடக்கல.. ஹர்திக் பாண்டியா பேட்டி
அவ்வாறு வேலை செய்யும்போது அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். தென்னாப்பிரிக்கா அணியில் நன் நன்ட்ரே பர்கர் ஒரு சிறப்பான கண்டுபிடிப்பு. அஸ்வின் மற்றும் சகல் எப்போதுமே சிறந்த பந்துவீச்சாளர்கள். இந்த பந்துவீச்சின் ஒரு பகுதியாக நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறி இருக்கிறார்.

